தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டில் எகிறும் மொத்த விலை பணவீக்கம் 10 சதவீதத்தை நெருங்குவதால் கலக்கத்தில் மக்கள்

16 Jun 2026, 8:46 pm
நாட்டில் எகிறும் மொத்த விலை பணவீக்கம்  10 சதவீதத்தை நெருங்குவதால் கலக்கத்தில் மக்கள்

நாட்டில் எகிறும் மொத்த விலை பணவீக்கம் 10 சதவீதத்தை நெருங்குவதால் கலக்கத்தில் மக்கள்

நாட்டில் நுகர்வோருக்குப் பொருட்கள் வந்து சேருவதற்கு முன்னால் தொழிற்சாலை, மொத்த வியாபாரச் சந்தையில் நிலவும் விலையேற்றத்தைக் குறிக்கும் மொத்த விலை பணவீக்கம் (Whole sale Inflation) வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக ஒன்றிய வர்த்தக அமைச்ச கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி,கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.26% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம், மே மாதத்தில் 9.68% ஆக எகிறியுள்ளது. இது கிட்டத்தட்ட 10% என்ற அபாயகரமான எல்லையை நெருங்கியுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட 49.82% வரை உயர்ந்துள்ளது. இதுவே ஒட்டுமொத்த விலையேற்றத்திற்கும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொ ருட்களின் மொத்த விலை பணவீக்கம் 3.11%- லிருந்து 4.49% ஆக அதிகரித்துள்ளது. தொழிற்சா லைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் 7.48% வரை உயர்ந்துள்ளது.

ஒன்றிய அரசாங்கம் தற்போது பொருளா தார நிலவரத்தை இன்னும் துல்லியமாகக் கணக்கிட ‘உற்பத்தியாளர் விலை குறியீடு’ (PPI - Producer Price Index) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கடந்த 2025 மே மாதத்தில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு தயாரிப்பு பொருள், இப்போது 2026 மே மாதத்தில் 109.38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தான் பாதிப்பு

மொத்தச் சந்தையில் பொருட்கள், எரிபொ ருட்களின் விலை இவ்வளவு வேகமாக உயரும் போது, வியாபாரிகள் அந்த கூடுதல் சுமையைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள். இறுதியில், இந்த விலை உயர்வு விநியோகச் சங்கிலி வழியாகப் பொதுமக்களாகிய நுகர் வோர் மீதே சுமத்தப்படும். எனவே, வரும் நாட்க ளில் கடைகளில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.