தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

18 Aug 2026, 8:32 pm
விளையாட்டு

காலே டெஸ்ட் : வெற்றிப் பாதையில் இந்திய அணி

2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சனியன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்​திய அணி​ தேவ்தத் படிக்கலின் (167 ரன்கள்) அபார சதத்தின் உதவியால் 116.4 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜ் (வேகம்), பிரசித் கிருஷ்ணா (வேகம்), மானவ் சுதர் (சூழல்), குல்தீப் யாதவ் (சூழல்), ரவீந்திர ஜடேஜா (சூழல்) ஆகிய இந்திய பந்துவீச்சாளர்கள் பல

முனை தாக்குதல் நடத்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந் தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக மானவ் சுதர் 4 விக்கெட்டு களை வீழ்த்தினார்.

178 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து இரண்டாவது இன்னி ங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்டர்கள், இலங்கை அணியின் பெர்னாண்டோ (4 விக்கெட்டுகள்), ஜெயசூர்யா (3 விக்கெட்டுகள்) ஆகி

யோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர். ரிஷப் பண்ட் (66 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (44 ரன்கள்), கே.எல்.ராகுல்(35 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஓரளவுசமாளித்து, ரன் குவிக்க மற்ற வீரர்கள்சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 48.5 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்துஆட்டமிழந்து, இலங்கை அணியின் வெற்றிக்கு 372 ரன்கள் நிர்ணயம் செய்தது.4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்திய வீராங்கனை உன்னத்தி ஹூடா அபாரம்

30ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தில்லியில் திங்களன்று தொடங்கியது. ஆகஸ்ட் 23 வரை தில்லி இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் நடைபெறும் இந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் (செவ்வாயன்று நடைபெற்றது) இந்தியாவின் உன்னத்தி ஹூடா - மியான்மரின் துசாரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற

இந்த போட்டியில் 22-20, 21-16 என்ற செட் கணக்கில் இந்தியாவின் உன்னத்தி ஹூடா அபார வெற்றி பெற்று, அடுத்த

சுற்றுக்கு முன்னேறினார். (மாலை 5 மணி நிலவரம் மட்டும்)

உலகக்கோப்பை ஹாக்கி 2026 இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

16ஆவது சீசன் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் இந்த தொடர் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும்ஒரே இடத்தில் (இரண்டு நாடுகளின் - இரண்டு மைதானங்களில்), ஒரே நேரத்தில் அதிரடி போட்டிகளுடன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி புதனன்று இரவு8:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய ஆடவர் அணிதனது முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. ஆனால் 2ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இதனால் தனது கடைசிலீக் போட்டியில் கட்டாய வெற்றிச் சூழலில் இந்தியா களமிங்குகிறது.

இந்தியா - பாகிஸ்தான்

நேரம் : இரவு 8:30 மணிக்கு (இந்திய நேரம்)

இடம் : ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

குறிப்பு : இந்திய மகளிர் அணிக்கு புதனன்று போட்டிகள் கிடையாது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.