தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

30 Oct 2026, 8:47 pm
விளையாட்டு

விளையாட்டு

நியூஸி., வீரர் பிலிப்ஸ் அதிரடி சதம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளைக் கொண்ட தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வாக தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று, இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில், 4ஆவது டி-20 போட்டி வெள்ளியன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி பிலிப்ஸ் சதத்தின் (107 ரன்கள்

- 49 பந்துகள் - 6 போர், 10 சிக்ஸ்) உதவியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாகமயாங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

120 பந்துக்கு 260 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற மிக மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஓவர் முதலே விக்கெட் சரிவால் கடுமையாக திணறியது. முக்கிய வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. திலக் வர்மா மட்டுமே30 ரன்களை (35 ரன்கள்) தாண்டினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியதால், நியூஸிலாந்து அணியின் வெற்றி, அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக தான் இருக்கும். 5ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி சீட்டோன் மைதானத்தில் நவ. 1 அன்றுநடைபெறுகிறது.

15 நிமிடங்களில் 3 கோல்கள் ரொனால்டோ அசத்தல்

சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-கலோத் அணிக்கு எதிராக அல்-நாசர் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ அடித்து சாதனை படைத்துள்ளார். ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் ரொனால்டோ தனது முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 72ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 81ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து, வெறும் 15 நிமிடங்களுக்குள் தனது மிரட்டலான ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் அல்-நாசர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அடித்த 3 கோல்களையும் சேர்த்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் 67ஆவது ஹாட்ரிக்கை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும், உலக கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்திராத சாதனையாக, தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 985 ஆக உயர்த்தியுள்ளார். உலக கால்பந்து வரலாற்றில் எவரும் எட்டாத 1,000 கோல்கள் என்ற இமாலய சாதனையைப் படைக்க கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இன்னும் 15 கோல்கள் மட்டுமே தேவை. இந்த ஆண்டின் இறுதிக்குள் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த இமாலய சாதனையைப் படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.