தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

29 Oct 2026, 8:55 pm
விளையாட்டு

விளையாட்டு

இந்திய அணியின் வெற்றி நடை தொடருமா? இன்று 4ஆவது டி-20 போட்டி

டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளைக் கொண்ட தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வாக தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று, இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில், 4ஆவது டி-20 போட்டி வெள்ளியன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ளதால், இந்த போட்டி இரு அணிகளுக்கும் எந்தவித முக்கியத்துவத்தையும் அளிக்காது. அதனால் ஆக்லாந்து டி-20 போட்டி வெறும் சம்பிரதாய போட்டியாகத்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூஸிலாந்து

இடம் : ஈடன் பார்க், ஆக்லாந்துநேரம் : மதியம் 12:30 மணி (இந்திய நேரம்)சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)

10 அடி தூரத்திற்கு கங்காரூ தாவல் வித்தியாசமான ஸ்லெட்ஜிங் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தெ.ஆ.வீரர்

தென் ஆப்பிரிக்கா நாட்டி ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 3ஆவது மற்றும்கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமனில் இருப்பதால், கேப்டவுனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளில் ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்டர் லபுஸ்சாக்னே தென் ஆப்பிரிக்க வீரர் ஹார்மர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது லபுஸ்சாக்னே அருகில் பீல்டிங் செய்துகொண்டிருந்த மேத்யூ பிரீட்ஸ்கே என்ற தென் ஆப்பிரிக்க வீரர் உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்று, வித்தியாசமான முறையில் லபுஸ்சாக்னேவை ஸ்லெட்ஜிங் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அதாவது, மேத்யூ பிரீட்ஸ்கே பிட்ச் பகுதியின் குறுக்கே 10 அடிக்கும் மேலாக அசத்தலாக தாவி, லபுஸ்சாக்னேவின் முகத்தை நேருக்கு நேராக (தாவலின் போது) கிண்டல் செய்து கொண்டாடினார்.

இந்த ஸ்லெட்ஜிங் கொண்டாட்டம்ஆஸ்திரேலிய அணியின் சின்னத்தைகுறிக்கும் ‘காங்கரூ’ விலங்கின் குதிக்கும் தன்மையை நினைவுபடுத்தும் வகையில் இருந்ததால், கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் இதனை

‘காங்கரூ தாவல் (ஜம்ப்)’ கொண்டாட்டம் என்று அழைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். தற்போது மேத்யூ பிரீட்ஸ்கேவின் வீடியோ டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது

ரன் கணக்கீட்டு குளறுபடியால் தோல்விஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-யிடம் புகார்

மகளிர் இளையோர் டி-20 சாம்பியன்ஷிப் தொடரின் நாக்-அவுட் போட்டியில் உத்தரகண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரன் கணக்கீட்டில் ஏற்பட்ட தவறால் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற உத்தரகண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் ஜார்க்கண்ட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி 3 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. 4ஆவது பந்தில் ஜார்க்கண்ட் வீராங்கனைகள் 2 ரன்கள் எடுக்க முயன்றபோது ரன் அவுட் விழுந்தது. ரன் அவுட் ஆவதற்கு முன்பாக பேட்டர்கள் 1 ரன் வெற்றிகரமாக ஓடி முடித்திருந்தனர். ஆனால், ரன் கணக்கீட்டில் அந்த 1 ரன்னைக் கணக்கில் சேர்க்காமல், விக்கெட்டைமட்டுமே பதிவிட்டனர். இதனால் ஜார்க்கண்ட் அணிக்கு கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்படுவதற்குப் பதிலாக, 5 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஜார்க்கண்ட் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரன் கணக்கீட்டில் தவறு இல்லை என்றால்,ஜார்க்கண்ட் வெற்றி அல்லது போட்டியை டிரா செய்து, சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றிருக்கும். இதனால்தான்ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.