தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

22 minutes before
விளையாட்டு

விளையாட்டு

ஹாமில்டனில் ருத்ரதாண்டவம் ஆடிய கனமழை 3ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போடாமலேயே ரத்து

நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை ஹாமில்டனில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திங்களன்று இரவு முதலே ஹாமில்டன் நகரில் கனமழை வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை காலை நேரத்திலும் மழை கொஞ்சம் கூட குறையவில்லை. அதீத காற்றுடன் மழை பெய்தது.

இதனால் 3ஆவது ஒருநாள் போட்டி டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதாலும், கடைசி 2 போட்டிகளின் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றிப் பெற்றால் அல்லது ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : சபலென்கா, ஆண்ட்ரீவா அபாரம்

உலகத் தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இந்தியன் வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரவமிக்க போட்டியாக கருதப்படும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி னார். வெற்றிக்காக கடுமையாக போராடிய முச்சோவா அதிர்ச்சிதோல்வியுடன் வெளியேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-0 என்ற செட்கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.