ஹைதராபாத்தில் நரேந்திர மோடி - டு லாம் சந்திப்பு இந்தியா - வியட்நாம் இடையே 25 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு இலக்கு!
7 May 2026, 10:12 pm

ஹைதராபாத்தில் நரேந்திர மோடி - டு லாம் சந்திப்பு இந்தியா - வியட்நாம் இடையே 25 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு இலக்கு!

புதுதில்லி, மே 7 - இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வியட்நாம் ஜனாதிபதி டு லாம் புதன்கிழமை சந்தித்து இரு நாடு களுக்கு இடையிலான வர்த்தகம் தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இருநாட்டு உறவுகளும் அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தப் பட்டுள்ளன.

குறிப்பாக அரிய வகை தாதுக்கள், மருந்துப் பொருட்கள் சந்தை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட துறை களில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 25 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் டு லாம் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் உள்ள டு லாம், தாம் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளுடன் உறவை வலுப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த அவரது நிலைபாடானது ஆசியாவின் முக்கிய நாடுகளுக்கு இடையிலான தனது சமநிலைப்படுத்தும் ராஜதந்திர உத்தியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என கூறப்படுகிறது.

சாகர் திட்டத் தூண்; மோடி புகழாரம் ஹைதராபாத் இல்லத்தில் நடை பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, சாகர் திட்டத்தின் முக்கிய தூணாக வியட்நாம் விளங்குகிறது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இரு நாடுகளும் தொடர்ந்து பங்க ளிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏவுகணை தயாரிப்புக்கு உதவும் இந்தியா பாதுகாப்புத்துறை உடன்பாடு களைப் பொறுத்தவரை முக்கியமாக, வியட்நாமிடம் உள்ள ரஷ்யத் தயாரிப் பான சுகோய்-30 போர் விமானங்கள், கிலோ-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல் களை பராமரிக்க (MRO support) இந்தியா முன்வந்துள்ளது.

மேலும், 300 மில்லியன் டாலர் மதிப்பிலான பாது காப்பு கடன் உதவி மூலம் 14 அதி வேக ரோந்துப் படகுகள் வாங்கும் பணி களும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பும் இதில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய தாதுப் பொருட்கள் எடுப்பதில் புரிந்துணர்வு இந்தியாவின் “இந்திய அரிய தாது பொருட்கள் நிறுவனம்” (IREL) மற்றும் வியட்நாமின் வியட்நாம் அணு சக்தி நிறுவனம் (VINATOM) இடையே அரிய வகை தாதுக்களை தோண்டி எடுப்பது, பதப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு தேவைப்படும் அரியவகை கனி மங்களுக்கு உலக நாடுகள் சீனாவை மட்டுமே சார்ந்துள்ள நிலையில், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் இந்தியாவில் அரிய வகை கனிம வளங்களை எடுக்க ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன.

தற்போது வியட்நாமும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வியட்நாம் மருந்துச் சந்தையில் இந்திய நிறுவனங்கள் அதேபோல இந்திய மருந்து நிறுவனங்கள் வியட்நாம் சந்தையில் எளிதாக முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2027 முதல் வியட்நாம் அரசு மருத்துவமனை களுக்கான மருந்து கொள்முதலில் இந்தியாவில் உள்ள பல தனியார் மருந்து நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

மூங்கில் இராஜதந்திரம் (bamboo diplomacy) என்பதே வியட்நாமின் வெளியுறவுக் கொள்கை.

மூங்கில் போல உறுதியான, எதற்கும் அடி பணியாத தற்சார்பு கொண்ட கொள்கையை அந்நாடு கடைப்பிடித்து வருகிறது.

ஏற்கெனவே சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் ‘விரிவான வெளியுறவுக் கொள்கையை ‘கொண்டுள்ள வியட்நாம், தற்போது இந்தியாவுடனும் அந்த உறவை ‘மேம்படுத்தப்பட்ட’ நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

இது உலகளாவிய அரசியல் சூழ லில் வியட்நாம் கடைப்பிடிக்கும் நடு நிலையான அதே சமயம் வலிமை யான ராஜதந்திர யுக்தியை காட்டு கிறது என அரசியல் வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்தியாவின் ஆதரவை நினைவு கூர்ந்த டு லாம்

உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சிலில் (ICWA) பேசிய டு லாம், 1954-இல் ஹனோய் விடுதலை பெற்ற ஒரு வாரத்திலேயே அன்றைய இந்திய பிரதமர் நேரு அங்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்தார்.

அதாவது சுதந்திரம் பெற்ற காலத்தில் உலக நாடுகளுடன் இந்தியா கடைப்பிடித்த ஆதரவு போக்குகளையும் நட்புறவையும் சுட்டிக்காட்டினார்.

1960-களில் இந்தியாவில் நடந்த வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இந்தியர்களால் முழங்கப்பட்ட “மேரா நாம், தேரா நாம், வியட்நாம், வியட்நாம்” (என் பெயரும் உன் பெயரும் வியட்நாம்) என்ற முழக்கத்தை மேற்கோள் காட்டி, இரு நாட்டு மக்களின் நீண்டகாலத் தோழமையை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.