தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்; கைது

22 Jul 2026, 11:03 pm
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்; கைது
<p><strong>இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்; கைது</strong></p><p>சேலம், ஜூலை 22- இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து, நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி யினரை காவல் துறையினர் கைது செய்தனர். விவசாயிகளுக்கு தீங்கு விளை விக்கும் இந்திய – அமெரிக்க வர்த் தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா கமிட்டி சார்பில், வளையசெட்டிபாளையம் பால் சொசைட்டி முன்பு புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, தாலுகா தலைவர் ஆர். ராஜேந்திரன், தென்னை விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நல்லதம்பி, பால் உற்பத்தியா ளர் சங்க தலைவர் மணி, கெடிக்கா வல் கிளை பொறுப்பாளர் கே.முரு கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, இப்போராட்டத் தில் பிரதமர் மோடி மற்றும் அமெ ரிக்கா அதிபர் ட்ரம்ப் ஆகியோரின் உருவ படத்தையும், ஒப்பந்த நக லையும் எரிக்க முயன்று கிழித்து எறிந்து வீசினர். இதனை தொடர்ந்து சங்ககிரி காவல்துறையினர் அனை வரையும் கைது செய்தனர். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. நல்லம் பள்ளியில் நடைபெற்ற போராட் டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச் சுனன், மாவட்ட துணைத்தலைவர் கள் கே.என்.மல்லையன், பி.இளம் பரிதி, ஒன்றிய நிர்வாகிகள் முனியப் பன், காளியப்பன் ஆகியோர் பங் கேற்றனர். பென்னாகரத்தில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.குமார், நிர்வாகி கே.அன்பு, இண் டூரில் மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.சின்னசாமி, பாப்பிரெட்டிப் பட்டியில் மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி, நிர்வாகிகள் சேகர், மனோ கரன் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.