தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூடு திரைக்குள் நடப்பது என்ன?

25 Jun 2026, 9:23 pm
மூடு திரைக்குள் நடப்பது என்ன?

மூடு திரைக்குள் நடப்பது என்ன?

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி யுள்ளதாக ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள் ளார். தில்லியில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி களுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடை பெற்றுள்ளது. ஆனால் எந்தெந்த துறைகளில் இரு நாடுகளும் வர்த்தகம் செய்து கொள்ள உள்ளன; இந்த உடன்பாட்டால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட இடைக்கால உடன்பாட்டிலேயே இந்தி யாவுக்கு பாதகமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், இறுதி உடன்பாட்டை செய்து கொள்ளுமாறு இந்தியா வை அமெரிக்கா நிர்ப்பந்தித்து வருகிறது.

அண்மையில் ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தித்த போது, மோடியை வானளாவ புகழ்ந்ததோடு விரையில் இருதரப்பு இறுதி உடன் பாடு கையெழுத்தாகும் என்று குதூகலமாக அறி வித்தார். அதற்கேற்பவே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு இந்தியா வந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இந்த உடன்பாட்டில் இந்தியாவை கையெ ழுத்திடச் செய்யும் நோக்கத்துடனேயே நம் நாட்டின் மீது அமெரிக்கா அநியாய வரி விதித்தது. பின்னர் இந்த வரியில் ஓரளவு குறைக் கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெ ரிக்கா மிரட்டியது. தற்போது கையெழுத்தாக வுள்ள இறுதி உடன்பாட்டில் அமெரிக்காவிட மிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்குவ தற்கு ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. எதிர்கா லத்தில் இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு அமெ ரிக்காவை முற்றாக சார்ந்திருப்பது என்ற நிலை ஏற்படுமானால், அதற்காக இந்தியா கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

இந்த இருதரப்பு உடன்பாட்டினால் இந்திய விவசாயத்துறை கடும் பாதிப்பை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் உற்பத்தியாகும் தானியங்கள், பழங்கள், பால் பொருட்கள் மலிவான விலை யில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்து இந்திய விவ சாயிகளை நட்டாற்றில் தள்ளும். அமெரிக்காவி லிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி அல்லது குறைந்த அளவு வரி விதிக்க வேண்டுமென ஏற்கெனவே நிர்பந் திக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்க ளில் சந்தையாக இந்தியா மாற்றப்படுவதால் உள் நாட்டு சிறு, குறு தொழில்கள் சிதையும். மேலும் இந்தியாவின் மருந்து உற்பத்தி மிகப் பெரிய அள வுக்கு பாதிக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கப் படுகிறது. முற்றிலும் அமெரிக்க நலன் சார்ந்த வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையும் திசை மாறும். இந்த உடன்பாடு குறித்து வெளிப் படையாக மோடி அரசு இந்திய மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.