கூடா நட்பு கேடாய் முடியும்
18 Jun 2026, 9:15 pm

கூடா நட்பு கேடாய் முடியும்

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு என்பது பரஸ்பர நட்புறவு மற்றும் நம்பிக்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இந்தி யாவின் நலனுக்கு எதிராகவே அனைத்து வகையிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிற அமெ ரிக்க - இந்திய வர்த்தக உடன்பாட்டில் கூட அமெ ரிக்காவிற்கு ஆதரவான அம்சங்களே அதிக மாக இடம் பெற்றுள்ளன. இந்த பின்னணியில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு என்ப தும் இந்திய நலனை மேலும் காவு கொடுப்பதா கவே அமையும் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்தினால் இந்தியாவை அமெரிக்கா பாதுகாக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் கடந்த கால வரலாறு என்பது வேறு வகையாக உள்ளது. சோவியத் யூனியன் இருந்த காலத்தில் இந்தியா வுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந் தது. அமெரிக்காவின் மிரட்டல்களை இந்தியா சந்திப்பதற்கு சோவியத் உதவியாக இருந்தது.

ஆனால் அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை என்பது இந்தியாவை மிரட்டி பணிய வைப்பதாகவே உள்ளது. அண்மையில் அமெரிக்க ராணுவம் சரக்கு கப்பல் மீது நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரி ழந்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி டிரம்ப்பி டம் முறையிட்டுள்ளார். ஆனால் இதற்கு டிரம்ப் வருத்தம் தெரிவிக்காதது மட்டுமல்ல, இனி இவ்வாறு நிகழாது என்று கூட கூறவில்லை. ஆனால் யாராவது தாக்கினால் இந்தியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பளிக்கும் என்று சவடால் அடிக்கிறார் டிரம்ப்.

பிரதமர் மோடி மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை உயிர்ப்பித்ததாக டிரம்ப்பை பாராட்டியுள்ளார். மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றத்தை ஏற் படுத்தி அமைதியையும், முன்னேற்றத்தையும் சீர்குலைத்தது அமெரிக்காவும் அதன் கூட்டா ளியான இஸ்ரேலும்தான். இப்போது வேறு வழியின்றி ஈரானுடன் உடன்பாடு செய்து கொள்ள அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆனால் இதையும்கூட டிரம்ப்பின் சாதனை போல பிரதமர் மோடி பாராட்டுவது பொருத்தமானது அல்ல.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக வரி மேல் வரி போட்டு இந்தி யாவை தண்டித்தது அமெரிக்கா. அமெரிக்க விளை பொருட்களின் சந்தையாக இந்தியாவை மாற்ற முயல்கிறது அமெரிக்கா. பாதுகாப்பு தள வாடங்களை மேலும் மேலும் இந்தியா இறக்கு மதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் கெடு நோக்கமாக உள்ளது. டிரம்ப்பின் பாராட்டு வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு உவப்பான தாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்திய நலனுக்கு எதிரானதாகவே டிரம்ப்பின் நடவ டிக்கைகள் உள்ளன.