முந்தய பக்கம்

இந்தியாவின் வேலையின்மை 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு

17 Jun 2026, 8:33 pm
இந்தியாவின் வேலையின்மை 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு

இந்தியாவின் வேலையின்மை 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 11 மாதங்களில் இல்லாத வகையில் 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் (PLFS) சமீபத்திய மாதாந்திர அறிக்கையின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதமானது ஏப்ரல் மாதம் 5.2 சதவீதத்திலிருந்தது. அது மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும் அதே வேளையில், தொழிலாளர்கள் பங்கேற் பும் (வேலை கிடைக்கும் அளவு) குறைந் துள்ளது. இது தொழிலாளர் சந்தை சுணக்க மடைவதைக் காட்டுகிறது என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புறங்களில் தொழிலாளர் படை பங்களிப்பு விகிதம் ( LFPR ) ஏப்ரல் மாதத்தில் 57.5 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 56.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. நகர்ப் புறங்களில் இது 50.1 சதவீதத்திலிருந்து 49.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.அதாவது வேலை செய்யத் தகுதியுள்ள மக்களில் பலர், வேலை தேடுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள் அல்லது வேலைச் சந்தையிலி ருந்து வெளியேறிவிட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram