தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலையின்மை விகிதம் 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15% ஆக உயர்வு

12 May 2026, 8:51 pm
வேலையின்மை விகிதம் 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15% ஆக உயர்வு

வேலையின்மை விகிதம் 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15% ஆக உயர்வு

புதுதில்லி ஒன்றிய புள்ளிவிவரம், திட்ட அமலாக்கத்துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள சமீ பத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு ஆய்வில், கடந்த 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகி தம் 15% ஆக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: “ஜனவரி - மார்ச் காலாண்டில் 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர் களிடையே வேலையின்மை விகி தம் 15% ஆக உயர்ந்துள்ளது.

இது அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 14.3% ஆக இருந்தது.

இளம் பெண்களிடையே வேலையின்மை முந்தைய காலாண்டில் 16.6% ஆக இருந்த நிலையில், தற்போது 17.7% ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் 30 முதல் 40 வயது வரை இந்த விகிதம் 13.5% இல் இருந்து 14% ஆக உயர்ந்துள்ளது

வாராந்திர நிலை வாராந்திர நிலை முறை என்பது ஒரு நபர் குறிப்பிட்ட வாரத்தில் ஒரு மணிநேரம் கூட வேலை செய்யா மல், ஆனால் அந்த காலகட்டத்தில் குறைந்தது ஒரு மணிநேரமாவது வேலை தேடிக்கொண்டிருந்தாலோ அல்லது வேலைக்குத் தயாராக இருந்தாலோ அவர் வேலையில்லா தவராகக் கருதப்படுவார்.

அதன் படி தற்போதைய வாராந்திர நிலை முறையின் கீழ், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 4.8% ஆக இருந்த இந்த விகிதம், ஜனவரி-மார்ச் காலாண்டில் 5% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை 6.7% இல் இருந்து 6.6% ஆகக் குறைந்தது. கிரா மப்புற வேலையின்மை 4% இல் இருந்து 4.3% ஆக அதிகரித்தது.

தேசிய அளவில் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) ஜனவரி-மார்ச் காலாண்டில் 55.5% ஆக இருந்தது (முந்தைய காலாண் டில் 55.8%). பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.9% இல் இருந்து 34.7% ஆகக் குறைந்துள் ளது. தொழிலாளர் மக்கள் தொகை விகிதமும் (WPR) 53.1% இல் இருந்து 52.8% ஆகச் சரிந்துள்ளது. துறை வாரியான மாற்றங்கள் கிராமப்புறங்களில், வழக்க மான ஊதியம், சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பங்கு 14.8% இல் இருந்து 15.5% ஆக அதிக ரித்துள்ளது.

சுயதொழில் செய்ப வர்களின் விகிதம் 63.2% இல் இருந்து 62.5% ஆகக் குறைந்தது. கிராமப்புற இந்தியாவில் விவசா யத் துறையில் ஈடுபடும் தொழிலா ளர்களின் பங்கு 58.5% இல் இருந்து 55.8% ஆகக் குறைந்துள்ளது.

சேவைத் துறையில் வேலை வாய்ப்பு 20.6% இல் இருந்து 21.7% ஆகவும், உற்பத்தித் துறை யில் 20.9% இல் இருந்து 22.6% ஆக வும் உயர்ந்துள்ளது” என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.