இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் ஆடை துறைக்கு வாய்ப்பு என ஏஇபிசி எதிர்பார்ப்பு!
19 Jun 2026, 9:51 pm

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் ஆடை துறைக்கு வாய்ப்பு என ஏஇபிசி எதிர்பார்ப்பு!

திருப்பூர், ஜூன் 19 - இந்தியா – இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 முதல் அமலுக்கு வருகிறது. இது ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏஇபிசி தலைவர் ஏ. சக்திவேல் வியாழனன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய மற்றும் உயர்தர நுகர்வோர் சந்தை களில் ஒன்றான இங்கிலாந்து சந்தையில் இந்திய ஆயத்த ஆடைப் பொருட்களுக்கு சுங்கவரி இல்லாத அணுகலை வழங்குவதன் மூலம், இந்திய ஆடைத் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆடைத் துறையில் பெரும்பான்மையாக பணியாற்றும் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஊக்கியாக இந்த ஒப்பந்தம் அமையும் என்றும் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.