முந்தய பக்கம்

இந்தியா - அரபு அமீரகம் இடையே எரிசக்தி உடன்பாடு!

15 May 2026, 10:03 pm
இந்தியா - அரபு அமீரகம் இடையே எரிசக்தி உடன்பாடு!
<p><strong>இந்தியா - அரபு அமீரகம் இடையே எரிசக்தி உடன்பாடு! </strong></p><p>அபுதாபி, மே 15 - இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே எரிசக்தி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் மோடி ஒரு வார காலத்திற்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக அவர், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி பாதுகாப்பு, பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) விநியோகம் மற்றும் பெட்ரோலிய இருப்பு தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மேலும், குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் உள்ள வோடினாரில் (Vadinar) கப்பல் பழுதுபார்க்கும் முனையம் அமைப்ப தற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. வரும் நாட்களில் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram