காசநோய் ஒழிப்பில் சாதனை
13 Nov 2026, 9:47 pm

காசநோய் ஒழிப்பில் சாதனை

உலக சுகாதார நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காசநோய் அறிக்கை, இந்தியாவின் மருத்துவ வர

லாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லைப்பதிவு செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது காசநோய் இறப்பு விகிதத்தில் 38 விழுக்காடு வீழ்ச்சியை இந்தியா கண்டுள்ளது; இது உலகளாவிய சரிவு விகிதமான 35 விழுக்காட்டை விட அதிகமாகும். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் ஆகியவை இந்த மாபெரும் வளர்ச்சியைத்தூண்டியிருந்தாலும், இந்தச் சாதனையின் உண்மையான கதா நாயகர்கள் களப்பணியாளர்கள்தான்.

புள்ளிவிவரங்களும் தொழில்நுட்பமும் வெறும் எண்களை மட்டுமே தர முடியும்; ஆனால், அந்த எண்களுக்குப் பின்னால் உயிரைக் கொடுத்து உழைப்பவர்கள் நம் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்கள்தான். இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் வீடு வீடாகச் சென்று, எளிய மக்களைத் தேடிப்பிடித்து பரிசோதனை மேற்கொள்வது சாதாரண காரியமல்ல.

துரிதமான பரிசோதனைகள், ஆரம்ப நிலை கண்டறிதல் மற்றும் நோயாளிகளுக் கான பிரத்யேக சிகிச்சை முறைகளைத் தடையின்றி வழங்கும் மருத்துவர்களின் பங்களிப்பு 94 விழுக்காடு சிகிச்சை வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த திட்டங்களின் கீழ், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நோயாளிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் உளவியல்ஆதரவை வழங்கி, அவர்களைத் தனிமைப்படுத்தாமல் சமூகத்துடன் இணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இவர்களின் கூட்டு முயற்சியால்தான் ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்பது வெறும் அரசாங்கத் திட்டமாக இல்லாமல், ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

இந்தியா 25 கோடிக்கும் அதிகமான மக்களைத் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதும், 15 லட்சத்திற்கும் அதிகமான வெளிப்படையான அறிகுறிகள்அற்றவர்களையும் முன்கூட்டியே கண்டறிந்ததும் பாராட்டுக்குரியவை. இருப்பினும், பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. ‘நிக்ஷய்’ ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ்வழங்கப்படும் நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டிகள் சில நேரங்களில் உரிய காலத்தில் நோயாளிகளைச்சென்றடைவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், கிராமப்புறங்களில் காசநோய் குறித்த அச்சமும், சமூக முத்திரைக் குத்தப்படும் என்ற அச்சமும் முழுமையாக மறையவில்லை. இதனால் பலரும் ஆரம்ப கட்டத்தில் பரிசோதனை செய்யத்தயங்குகின்றனர்; அரசு இயந்திரம் தொழில் நுட்ப வளர்ச்சியில் காட்டும் ஆர்வத்தை, அடிமட்ட மக்களிடையே நிலவும்உளவியல் மற்றும் சமூகத் தடைகளைத் தகர்ப்பதில் இன்னும் தீவிரமாகக் காட்ட வேண்டும்.