முந்தய பக்கம்

4ஆவது முறையாக பிரிக்ஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் இந்தியா

yesterday
4ஆவது முறையாக பிரிக்ஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் இந்தியா
<p><strong>4ஆவது முறையாக பிரிக்ஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் இந்தியா</strong> </p><p>இந்தியாவின் தலைமையில் 2026ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ஹரியானா மாநிலம் குர்கானில் நடை பெறவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சி முறை தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, இம்மாநாட்டை முன்னின்று நடத்துகிறது. இதற்கு முன்பு கடந்த 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா மாநாடுகளை நடத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில் நான்காவது முறையாக இந்தியா தலைமைப் பொறுப்பேற்று நடத்துகிறது. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோ னேசியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரே பியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மாநாட்டில் பங்கேற்கின்றன. மாநாடு எப்போது? இந்த 11ஆவது பிரிக்ஸ் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாடு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, பிரிக்ஸ் அமைப்பின் மூத்த எரிசக்தி அதிகாரிகளின் 4ஆவது கூட்டம் ஜூன் 22 முதல் 24 வரை குர்கா னில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram