முந்தய பக்கம்

2035-க்குள் இந்தியாவிற்கு தனி விண்வெளி நிலையம்

25 Jan 2026, 4:16 pm
2035-க்குள் இந்தியாவிற்கு தனி விண்வெளி நிலையம்
<p><strong>2035-க்குள் இந்தியாவிற்கு தனி விண்வெளி நிலையம்</strong></p> <p>இஸ்ரோ தலைவர் நம்பிக்கை கோயம்புத்தூர், ஜன.25 - கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏ.ஜே.கே. கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி &nbsp;விருதுகள் வழங்கும் விழாவில், இஸ்ரோ தலை வர் நாராயணன் விருதுகளை வழங்கினார். &nbsp;பின்னர் மாணவர்களிடையே அவர் பேசுகை யில், &ldquo;இந்தியா இன்று விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் ஏவுதல், உள்நாட்டு கண்டு பிடிப்புகள், மேம்பட்ட விண்வெளி பயணங்கள் ஆகியவற்றின் மூலம் உலகளவில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. முன்பு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு கள் மட்டுமே மாணவர்களின் இலக்காக இருந்தது. &nbsp;தற்போது உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறை களில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வரவேற்கத் தக்கது. கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் &nbsp;மாணவர்கள் தங்களது கல்வி குறித்து எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை. எந்தத் துறை யில் படித்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் &nbsp;சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். விண்வெளித் &nbsp;துறையில் இந்தியாவின் சாதனைகள் உலக நாடு களை வியக்க வைத்துள்ளன. நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்று உள்ளோம். 2035-க்குள் இந்தியாவிற்கெனத் தனி &nbsp;விண்வெளி நிலையம் அமைக்கப்படும். அதற்கான பணிகள் 2028-லேயே தொடங்கும். 2047-க்குள் &nbsp;&lsquo;விக்சித் பாரத்&rsquo; இலக்கை அடைய மாணவர்கள் தங்க ளது பங்களிப்பை வழங்க வேண்டும்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram