2030-ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் காற்றாலை மின் திறனை எட்ட இலக்கு சென்னையில் ஒன்றிய அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்
9 Oct 2026, 12:02 am

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் காற்றாலை மின் திறனை எட்ட இலக்கு சென்னையில் ஒன்றிய அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்

சென்னை, அக். 8-சென்னையில் நடைபெற்று வரும் 8-வது‘விண்டர்ஜி இந்தியா 2026’ சர்வதேச காற்றாலை சக்தி மாநாடு மற்றும் கண்காட்சியை ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரலாத்ஜோஷி வியாழக்கிழமை (அக்.8) தொடக்கிவைத்தார்.

அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறும்இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள், காற்றாலை சக்தி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

உலகளாவிய காற்றாலை மின் சக்தி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த மாநாட்டில் டென்மார்க், ஜெர்மனி, ஸ்பெயின்உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய ஒன்றிய அமைச்சர் பிரலாத் ஜோஷி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 6.05 கிகாவாட் அளவுக்குகாற்றாலை மின் உற்பத்தி திறன் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தி திறன் 59.20 கிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் காற்றாலை மின்திறன் என்ற இலக்கை இந்தியா எளிதில் எட்டும் என்று தெரிவித்தார்.

மாநில மின் கொள்கைமாநில மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், விரைவில்

தமிழக மின் கொள்கை வெளியிடப்படும் என்றார். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்றும் இந்த மின் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு உற்பத்தியாளர்களுக்கும் காற்றாலை சாதன தயாரிப்புநிறுவனங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.