கியூபா மீதான பொருளாதார தடைகளுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!
29 Oct 2026, 2:03 pm
<p>கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.</p><p>கியூபா மீது அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டுவர 34-ஆவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா பொதுச் சபையில் நேற்று நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 130 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல், உக்ரைன் உள்ளிட்ட 17 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. </p><p>தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது பேசிய இந்தியா சார்பில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகத்தின் ஆலோசகர் சவுமியா நாயர், "கீயூபா மீதான தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். கியூபாவின் சுகாதார அமைப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன; அதே சமயம் கடந்த ஐந்து ஆண்டுகளில் உணவு உற்பத்தி 50 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தின் மீது சமீபகாலமாகக் கடுமையாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், உணவு விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை கடுமையாகப் பாதித்துள்ளன” என தெரிவித்துள்ளார்.</p>
