தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள் வழங்கிய இந்தியா! சர்வதேச அமைப்பான ஆம்னெஸ்டி கடும் குற்றச்சாட்டு

30 Jul 2026, 9:06 pm
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள் வழங்கிய இந்தியா! சர்வதேச அமைப்பான ஆம்னெஸ்டி கடும் குற்றச்சாட்டு

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள் வழங்கிய இந்தியா! சர்வதேச அமைப்பான ஆம்னெஸ்டி கடும் குற்றச்சாட்டு

டெல் அவிவ், ஜூலை 30 - காசாவில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனப்படு கொலைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக ‘ஆம்னெஸ்டி இண்டர்நேசனல்’ எனப்படும், சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

2023 அக்டோபர் 7-க்குப் பிறகு இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஆயுதத் துறையில் நெருக்கமான மற்றும் லாபம் தரும் உறவு உருவாகியுள்ளது என்பதை ‘ஆம்னெஸ்டி’ ஆவணப்படுத்தி யுள்ளது

. 2,596 வெடிமருந்துகள் - உதிரி பாகங்கள் ஏற்றுமதி “இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் விநியோ கம்” என்ற தலைப்பில், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 அக்டோபர் 7-க்குப் பிறகு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 2,596 ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உதிரிபாகங்கள் தொடர் பான ஏற்றுமதி தரவுகளை தங்கள் அமைப்பு ஆய்வு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள், இஸ்ரே லின் ராணுவத்துக்கு 3,90,516 சிறு ஆயுத உதிரிப்பாகங்கள் மற்றும் தற் கொலை டிரோன்கள், வெடிகுண்டு கள், பீரங்கி குண்டுகள் போன்ற 5,64,970 வெடிகுண்டு வகை ஆயு தங்கள், ராணுவ வாகனத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்துள்ளது.

இனப்படுகொலைக்கு இந்தியா தொடர் ஆதரவு

காசாவில் இனப்படுகொலை யைத் தடுக்க நடவடிக்கை எடுக்கு மாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) 2024-இல் உத்தரவிட்டிருந்தது. எனினும் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளை தடுக்க முடி யவில்லை. மாறாக அந்நாட்டின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுதொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செய லாளர் ஆக்னஸ் கலாமார்ட் கூறுகையில், காசாவில் இனப்படு கொலை நடந்து வருவதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் தினசரி ஒளிபரப்பி வந்தாலும், இஸ்ரேல் ராணுவத்திற்கு இந்தியா தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வந்துள்ளது என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

ஆயுதங்கள் தயாரிப்பில் அதானி - இஸ்ரேல் கூட்டு

இந்தியா - இஸ்ரேலுக்கு இடையிலான ராணுவ ஒப்பந்தங் கள் மோடி தலைமையிலான ஆட்சி யில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அதானி, இஸ்ரேல் நிறு வனத்துடன் இணைந்து, ‘ஹெர்மஸ் - 900’ என்ற டிரோனை தயாரித்து அந்நாட்டுக்கு விற்பனை செய்கிறார். இந்த டிரோன் தான் பாலஸ்தீனர்களை படுகொலை செய்ய பிரதானமாக பயன்படுத்தப் படுகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தகவல்படி, 2020 மற்றும் 2025க்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலின் ஆயுதத் துறைக் கான தேவையில் சுமார் 29 சத விகிதத்தைக் கொடுக்கும் மிகப் பெரிய கூட்டாளியாக இந்தியா மாறியுள்ளது.

சர்வதேச குற்றவாளியுடன் கைகுலுக்கும் மோடி அரசு

2025 நவம்பர் 4 அன்று இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற போது, ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் காக இரு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இனப்படுகொலை குற்றத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய உத்தரவிட்டிருந்த போதிலும், அந்நாட்டுக்கு ராணுவ ஏற்றுமதிகள் செய்து இனப்படுகொலைக்கு உதவி வருகிறது மோடி அரசு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.