தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் மோதலால் தீவிரமடையும் எரிசக்தி நெருக்கடி இந்தியாவின் நெருக்கடி கால கச்சா எண்ணெய் சேமிப்பு - ஒரு பார்வை!

21 May 2026, 9:25 pm
ஈரான் மோதலால் தீவிரமடையும் எரிசக்தி நெருக்கடி இந்தியாவின் நெருக்கடி கால கச்சா எண்ணெய் சேமிப்பு - ஒரு பார்வை!

ஈரான் மோதலால் தீவிரமடையும் எரிசக்தி நெருக்கடி இந்தியாவின் நெருக்கடி கால கச்சா எண்ணெய் சேமிப்பு - ஒரு பார்வை!

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் மோதல் சூழல், உலகளாவிய எரிசக்தி விநி யோகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் கடல்சார் வழித்தடங்கள் இந்த மோதல் அலையால் பாதிக் கப்படும் அபாயம் எழுந்துள்ளதால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான உத்தியாக வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் இருப்பு (Strategic Pet roleum Reserves - SPR) குறித்த விவாதங்கள் முன்னெழுந்துள்ளன

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியும் இந்தியப் பொருளாதாரமும்

இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 30 சதவீதம், மேற்கு ஆசியா வின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) வழியாகவே நடை பெறுகிறது. ஈரான் - இஸ்ரேல் இடை யே நிலவும் மோதல் போக்கு கார ணமாக, இந்த வழித்தடத்தில் ஏதே னும் தடை ஏற்பட்டால், அது உலகள வில் கச்சா எண்ணெய் விலையைக் கடுமையாக உயர்த்தும். இத்தகைய விலை உயர்வு இந்தியாவில் எரி பொருள் விலை ஏற்றம், பண வீக்கம் மற்றும் ஒட்டுமொத்தப் பொரு ளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் பெரும் சவாலாக உருவெடுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் அவசரகால எண்ணெய் சேமிப்பு எங்குள்ளது?

இத்தகைய சர்வதேச நெருக்கடி காலங்களில் நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்திய அரசு நிலத்தடிப் பாறை குடைவுக ளில் அவசரகாலக் கச்சா எண்ணெய் சேமிப்பு மையங்களை உருவாக்கி யுள்ளது. இந்திய நெருக்கடிகால பெட் ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மூலம் நிர்வகிக்கப்படும் இந்த மையங்கள் முதற்கட்டமாகப் பின் வரும் மூன்று இடங்களில் அமைக் கப்பட்டுள்ளன:

l விசாகப்பட்டினம் (ஆந்திரா): 1.33 மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன்.

l மங்களூரு (கர்நாடகா): 1.50 மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன்.

l பதூர் (கர்நாடகா): 2.50 மில்லி யன் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன்.

இவற்றின் மூலம் ஒட்டுமொத்த மாகச் சுமார் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சேமித்து வைக்க முடியும். இது இந்தியாவின் சுமார் 9.5 நாட்க ளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும்.

இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம்

தற்போதைய உலக அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அவசர காலச் சேமிப்புத் திறனை மேலும் அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளது. இதன் இரண்டாம் கட்ட மாக, ஒடிசாவின் சண்டிகோல் (4 மில்லியன் மெட்ரிக் டன்) மற்றும் கர்நாடகாவின் பதூர் (கூடுதலாக 2.5 மில்லியன் மெட்ரிக் டன்) ஆகிய இடங்களில் வணிகரீதியிலான புதிய நிலத்தடிச் சேமிப்பு மையங்க ளை அமைக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டம் முழுமைய டையும் போது இந்தியாவின் அவசர கால எரிசக்திப் பாதுகாப்பு மேலும் வலுப்படும்.

இதுதவிர, நாட்டின் பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனங்கள் தங்களின் சொந்தக் கிடங்குகளில் சுமார் 64.5 நாட்க ளுக்கான கச்சா எண்ணெய் இருப் பைக் கொண்டுள்ளன. எனவே, இந்த நிலத்தடி அவசரகாலச் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிறு வனங்களின் இருப்பு ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும் போது, வெளி நாடுகளில் இருந்து கச்சா எண் ணெய் விநியோகம் முற்றிலும் தடை பட்டாலும், இந்தியாவால் சுமார் 74 நாட்களுக்குத் தடையின்றிச் சமா ளிக்க முடியும் எனத் தரவுகள் தெரி விக்கின்றன. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் ஹோர்முஸ் நீரி ணையில் ஏற்படும் பதற்றம் இந்தியா வின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தித் துறைக்கு விடுக் கப்படும் மிகப்பெரிய சோதனையாக வே பார்க்கப்படுகிறது. (தி மிண்ட்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.