ராணுவம், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே ஒப்பந்தம்!
16 Jun 2026, 1:17 am
<p><strong>ராணுவம், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே ஒப்பந்தம்!</strong></p><p>பிராட்டிஸ்லாவா, ஜூன் 15 - பிரதமர் மோடி பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஸ்லோவாக்கிய தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவை சந்தித்து உரையாடினார். இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் தங்களுக்குள் இருக்கும் நட்புறவை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறையில் இணைந்து செயல்பட ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கம்ப்யூட்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இணைந்து செயல்படப் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் கண்ணியத்தைக் காப்பதாகவும், பொறுப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் பிகோ வெகு வாகப் பாராட்டினார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p>
