தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேல் - அமெரிக்க அராஜகத்தை இந்தியா கண்டிக்க வேண்டும்! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

28 Feb 2026, 2:29 pm
இஸ்ரேல் - அமெரிக்க அராஜகத்தை இந்தியா கண்டிக்க வேண்டும்! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
<p><strong>இஸ்ரேல் - அமெரிக்க அராஜகத்தை இந்தியா கண்டிக்க வேண்டும்! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்</strong></p> <p>புதுதில்லி, பிப். 28 - ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் தாக்குதல் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் தாக்குதல் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தேசிய இறையாண்மை, ஐ.நா. சாசனம் மற்றும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் அப்பட்ட மாக மீறும் நடவடிக்கைகளாகும். ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளைப் புறக் கணித்து அமெரிக்காவும் இஸ்ரே லும் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்கு தல்கள் மூலமாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அறிக்கைகள் மூலமாகவும், பேச்சுவார்த்தைகளில் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொண்ட வர்கள் இல்லை என்பது தெளி வாகிறது. &nbsp;போர் வெறி - அராஜகத்தை இந்தியா கண்டிக்க வேண்டும்! அமெரிக்கா போர்வெறியுட னும், அராஜகமாகவும் செயல்பட்டு, இறையாண்மை கொண்ட நாடுகளைத் தன்னிச்சை யாகத் தாக்குகிறது. அண்மை யில் வெனிசுலா மீதான தாக்கு தல், கியூபாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்கு தல் நடந்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்த உடனேயே ஈரான் மீதான &nbsp;தாக்குதல் நடந்துள்ளது. &nbsp;இந்நிலையில், இந்திய அரசு &nbsp;அதன் நட்பு நாடான ஈரான் மீதான &nbsp;தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும். மேலும் உடனடியாக ஈரானுக்கு எதிரான விரோதப் போக்குகளை நிறுத்துமாறும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கோரி யுள்ளது. (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.