முந்தய பக்கம்

சேவைத் துறை வளர்ச்சி கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு

3 Jul 2026, 7:32 pm
சேவைத் துறை வளர்ச்சி கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு
<p><strong>சேவைத் துறை வளர்ச்சி கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு</strong></p><p>இந்தியாவின் சேவைத் துறை (Services Sector) வளர்ச்சி கடந்த 17 மாதங்களில் இல்லாத அள வுக்கு ஜூன் மாதத்தில் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி (HSBC) நடத்திய தனியார் துறை ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதுதொடர்பாக அந்த ஆய்வறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியாவின் சேவைத் துறைக்கான எச்.எஸ்.பி.சி குறியீடு (HSBC India Ser vices PMI), கடந்த மே மாதத்தில் 59.8 ஆக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 57.4 ஆகக் குறைந்துள்ளது. சந்தையில் புதிய ஆர்டர்கள் வருவது கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் ஆகும். குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் அது துறையின் வளர்ச்சி யைக் குறிக்கும் என்றாலும், இந்த 57.4 என்ற அளவு 2025 ஜனவரிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சியாகும்” என அதில் கூறப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram