தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுகள் அகற்றம்: 101 பணியாளர்கள் மரணம்! கும்பகர்ண தூக்கத்தில் ஒன்றிய அரசு! -அன்வர்

9 Jul 2026, 9:28 pm
கழிவுகள் அகற்றம்:  101 பணியாளர்கள் மரணம்! கும்பகர்ண தூக்கத்தில் ஒன்றிய அரசு! -அன்வர்

கழிவுகள் அகற்றம்: 101 பணியாளர்கள் மரணம்! கும்பகர்ண தூக்கத்தில் ஒன்றிய அரசு! -அன்வர்

இந்தியாவில் சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில், இந்த ஆண்டின் ஜூலை 9ஆம் தேதி வரையிலான 188 நாட்களிலேயே 101 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை துப்புரவுப் பணியாளர் அமைப்பு (Safai Karamchari Andolan) வெளியிட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் 121 பேர் உயிரிழந்த நிலையில், நடப்பு ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு தொழிலாளி மரணமடையும் கொடூரம் தொடர்கிறது. 16 மாநிலங்களில் பரவலாக இந்த மனிதநேயமற்ற மரணங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளபோதிலும், ஒன்றிய பா.ஜ.க. அரசு வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.

சட்டங்கள் இருந்தும் தொடரும் அவலம்!

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இந்த அவலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியதன் பின்னணியில், கடந்த 2013ஆம் ஆண்டு இதனைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், 2013 முதல் தற்போது வரை 1,726 துப்புரவுப் பணியாளர்கள் இப்பணியின்போது உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 1,203 மரணங்கள் கீழே உள்ள 7 மாநிலங்களில் மட்டுமே நடந்துள்ளன: தமிழ்நாடு: 332; குஜராத்: 216; தில்லி: 157; மகாராஷ்டிரா: 155; உத்தரப் பிரதேசம்: 148; ஹரியானா: 104; பீகார்: 91;

அமைச்சர்களின் அப்பட்டமான பொய்!

கடந்த 2016இல் 39 ஆக இருந்த மரணங்களின் எண்ணிக்கை, 2017இல் 137 ஆக, அதாவது 350% உயர்ந்தது. இத்தனைத் துயரங்களுக்குப் பிறகும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாகக் கழிவுகளை அகற்றும் பணியில் எவருமே மரணிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர்கள் பகிரங்கமாக அப்பட்டமான பொய்களைக் கூறி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் துப்புரவுப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, புகைப்படம் எடுத்து விளம்பரம் தேட முனையும் பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும், இந்த மரணங்களைத் தடுக்க இயந்திரப் பயன்பாட்டை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. -அன்வர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.