தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமப்புற ஊதியம் 17 சதம் உயர்ந்ததாகப் பொய் கணக்கு? ஒன்றிய அரசின் புள்ளி விவர ‘மாயாஜாலம்’ அம்பலம்!

24 Jun 2026, 8:55 pm
கிராமப்புற ஊதியம் 17 சதம் உயர்ந்ததாகப் பொய் கணக்கு? ஒன்றிய அரசின் புள்ளி விவர ‘மாயாஜாலம்’ அம்பலம்!

கிராமப்புற ஊதியம் 17 சதம் உயர்ந்ததாகப் பொய் கணக்கு? ஒன்றிய அரசின் புள்ளி விவர ‘மாயாஜாலம்’ அம்பலம்!

மோடி அரசின் ஆட்சிக்காலத் தில் கிராமப்புற மக்களின் தினசரி ஊதிய உயர்வு ஆண்டுக்குச் சராசரியாக 5 சத விகிதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இது நாட்டின் பணவீக்கத்தை (விலை வாசியை) எதிர்கொள்ள தேவையான உயர்வு அல்ல. னவே கிராமப்புற மக்களின் வரு மானம் தேக்கமடைந்துள்ளதாகப் பொருளாதார அறிஞர்கள் தொ டர்ந்து கூறி வருகின்றனர். குறிப் பாக, கொரோனா பெருந்தொற்று க்குப் பிறகு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர் கள் மீண்டும் கிராமங்களுக்கே திரும்பியதால் (Reverse Migra tion), அங்கு வேலை வாய்ப் பின்மையும், சம்பளப் பற்றாக் குறையும் மேலும் மோசமடைந்தது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ லில், இந்திய தொழிலாளர் வாரியம் (Labour Bureau) திடீரென ஒரு புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கிரா மப்புற தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறுகிய மாதங்களில் 17 சதவிகிதமாகக் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. அடிமட்ட அளவில் எந்த முன்னேற்றமும் இல்லாத போது இந்த அசுர வளர்ச்சி எப்ப டிச் சாத்தியம் என்று பொருளாதார வல்லுநர்கள் குழப்பமடைந்தனர்.

அம்பலமான ‘மாயாஜாலம்’

‘சிஸ்டமேட்டிக் இன்ஸ்டிடியூ ஷனல் ஈக்விட்டிஸ்’ எனும் நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதி காரியும், முதன்மை ஆய்வாளரு மான தனஞ்சய் சின்ஹா, இந்தத் தரவுகளை ஆழமாக ஆராய்ந்து, இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

“இந்தியாவின் கிராமப்புற ஊதியத்தின் எதிர்பாரா உயர்வின் விசித்திரமான வழக்கு” என்ற பெயரில் ஒரு விரிவான ஆய்வு அறிக்கையையும் அவர் வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கை யின்படி, 2025 ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் கிராமப்புற ஊதியத் தரவுகளில் இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றம் அல்ல மாறாக ஒன்றிய அரசு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் முறையில் (Sam pling Methodology) செய்துள்ள தந்திரமே காரணமாக உள்ளது.

புள்ளிவிவரத்தில் என்ன தந்திரம்?

பாஜக அரசாங்கம் யாருக்கும் தெரியாமல், இந்தியாவின் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதே சங்களின் (வடகிழக்கு மாநி லங்கள், தில்லி என்.சி.ஆர், கோவா, புதுச்சேரி) தரவுகளுக்குப் புள்ளிவிவரப் பட்டியலில் கூடுதல் முக்கியத்துவம் (Weightage) கொடுத்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமப்புற தொழிலாளர்களில் இந்த 10 மாநிலங்களின் பங்கு வெறும் 1.5% க்கும் குறைவு தான் என்பதே உண்மை . ஆனால், புதிய கணக்கெடுப்பு மாதிரியில் இவர்களின் முக்கியத்துவத்தை (Weightage) 11% ஆக பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

அதே நேரத்தில், பெரும் பான்மையான கிராமப்புற தொழி லாளர்களைக் கொண்ட மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் போன்ற ஏழை மாநிலங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவு என்ன?

புதுதில்லி, கோவா, வடகிழக்கு மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவு. அங்கு ஓரளவுக்குத் திறன் பெற்ற (Skilled labor) தொழி லாளர்கள் அதிகம் என்பதால், அவர்களின் சராசரி தினசரி சம்பளம் மற்ற மாநிலங்களை விட 50% முதல் 55% வரை அதிக மாகும்.

மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான தொழிலாளர்களைக் கொண்ட இந்த உயர் வருவாய் மாநிலங்களுக்கு 11% முக்கியத்து வம் கொடுத்ததால், இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கிராமப்புற ஊதியம் (National Average Wage) செயற்கையாக உயர்ந்து காட்சியளிக்கிறது. இப்படித்தான் பாஜக அரசு இந்த புள்ளி விவ ரத்தில் தில்லுமுல்லு செய்துள் ளது.

வரவிருக்கும் ஆபத்துகள்

இந்தத் தவறான புள்ளி விவரத் தரவுகள், நாட்டின் புதிய நுகர்வோர் விலை குறியீடு (CPI) கணக்கீட்டிலும் பயன்படுத் தப்பட உள்ளதால், இனிவரும் காலங்களில் நாட்டின் உண்மை யான பணவீக்கம் (விலைவாசி ஊர்வு) மற்றும் மக்களின் நுகர்வுத் திறனைக் கணக்கிடுவதிலும் பெரும் குளறுபடிகளை ஏற் படுத்தும் ஆபத்து உள்ளது.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்படாத நிலையில், இது போன்ற நம்பகத்தன்மையற்ற புள்ளிவிவர முறைகேடுகள், நாட்டின் அதிகாரப்பூர்வ பொரு ளாதாரத் தரவுகளின் மீதான வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் பெரு மளவில் கேள்விக்குறியாக்கி யுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.