தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் சாலை விபத்துகளால் 1.83 லட்சம் பேர் உயிரிழப்பு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்

24 Jul 2026, 9:08 pm
இந்தியாவில் சாலை விபத்துகளால் 1.83 லட்சம் பேர் உயிரிழப்பு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்

இந்தியாவில் சாலை விபத்துகளால் 1.83 லட்சம் பேர் உயிரிழப்பு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்

புதுதில்லி நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 5,13,563 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை (2024) விட 5.3% அதிக மாகும். கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் சிக்கி 1,83,382 பேர் பரிதாபமாக உயிரிழந்துள் ளனர். 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,77,175 ஆக இருந்தது. இதன் மூலம் உயிரிழப்பு கள் 3.5% அதிகரித்துள்ளன. தற்போதைய நில வரப்படி, நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 விபத்துகளும், அதில் 21 உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. நாளுக்கு நாள் விபத்து மரணங்கள் அதிகரித்து, தினமும் சராசரியாக 502 பேர் சாலைகளிலேயே உயிரை விடுகின்றனர்.

மாநில வாரியாக நிலவரம்

சாலை விபத்து மரணங்களில் உத்தரப்பிர தேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2024இல் 24,118 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, 2025இல் 27,550 ஆகக் கடுமையாக உயர்ந்தது. தமிழ்நாட்டில், 2025இல் 71,387 சாலை விபத்து கள் பதிவாகியுள்ளன. விபத்துகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதுடன், விபத்து மரணங்களில் 18,505 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் ஆறுதல்

கார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தில்லி போன்ற சில மாநிலங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப்பில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாப்பில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.