விளையாட்டு
8 Nov 2025, 5:47 pm

இந்தியா பதிலடி ஆஸி.,க்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றி அசத்தல்

இந்தியா- ஆஸ்திரேலியா இடை யிலான 5ஆவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா) மைதானத்தில் சனி யன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரண மாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியதால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர் கள் அறிவித்தனர். இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. இந்திய வீரர் அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி-20 தொ டரை இந்தியா கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் கோப்பை குவைத்,

பாகிஸ்தான் அணியிடம் தோல்வி; இந்தியா வெளியேற்றம் கிரிக்கெட் உலகின் அதிவேக தொடராக கருதப் படுவது ஹாங்காங் சிக்ஸஸ் தொடராகும். 6 ஓவர்களைக் கொண்ட இந்த தொடரின் 21ஆவது சீசன் ஹாங்காங்கின் (சீனா) மோங் ஹாக் நகரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை என 12 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. இதில் “குரூப் சி” இடம்பெற்றுள்ள இந்திய அணி, நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 2 லீக் போட்டிக ளிலும் தோல்வி அடைந்ததால், ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக் க்கெட் தொடரில் இருந்து 2005இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் அமெரிக்கா வி4ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறு கிறது. இந்த ஒலிம்பிக் கில் கிரிக்கெட் (டி-20 வடிவில்) இடம்பெறும் என ஏற்கனவே அறி விக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசை பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு (விதி கள் இன்னும் வெளியாகவில்லை) செய்ய சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடை பெறும். ஒலிம்பிக் வரலாற்றில் 1900ஆம் ஆண்டு கிரிக் கெட் இடம் பிடித்திருந்தது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக் கெட் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.