12 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் கொண்ட மருந்துகளுக்கு கட்டுப்பாடு
10 Jul 2026, 8:06 pm
<p><strong>12 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் கொண்ட மருந்துகளுக்கு கட்டுப்பாடு</strong></p><p>12 சதவீதத்திற்கும் மேல் ஆல்க ஹால் கலந்துள்ள மருந்துப் பொருட்களை வாங்குவதில் ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு பிறப்பி த்துள்ள உத்தரவில், “12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ள இருமல் சிரப்புகள், டானிக்குகள் மற்றும் டிஞ்சர் களை இனி மருத்துவரின் முறையான பரிந்துரைச்சீட்டு இன்றி மருந்தகங் களில் வாங்கக் கூடாது. மருந்தகங்களும் கவனமாக இருக்க வேண்டும். 30 மில்லிக் கும் அதிகமான அளவில் விற்கப்படும் இத்தகைய மருந்துகளை வாங்குபவர் களின் விவரங்களை, மருந்தகங்கள் தனி யாகப் பதிவேட்டில் பராமரிக்க வேண் டும். இது மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்க உதவும். இத்தகைய அதிக ஆல்கஹால் கொண்ட மருந்து கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தகுந்த மருத்துவ ஆலோ சனையின்றி இவற்றை உட்கொள்வ தால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவு, மருந்து விற்ப னையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதுடன், பாதுகாப்பற்ற முறையில் மருந்துகள் கையாளப்படு வதையும் தடுக்கும். முறையான மருத் துவ ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தாக முடியலாம். அதனால் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
