முந்தய பக்கம்

வெனிசுலாவை சென்றடைந்த இந்தியா நிவாரண உதவிகள்

29 Jun 2026, 8:30 pm
வெனிசுலாவை சென்றடைந்த இந்தியா நிவாரண உதவிகள்

வெனிசுலாவை சென்றடைந்த இந்தியா நிவாரண உதவிகள்

புதுதில்லி, ஜூன் 29 - நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள வெனிசுலாவுக்கு சர்வதேச நாடுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், இந்திய அரசு ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Operation Amistad) என்ற திட்டத்தின்கீழ், வெனிசுலா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுவினரை வெனிசுலாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா அனுப்பி வைத்த நிவாரண உதவிகள் வெனிசுலாவை சென்றடைந்துள்ளன. இந்த மனிதாபிமான உதவியானது அங்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையும் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு இந்திய விமானப்படை சி-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள், தில்லியில் இருந்து கராகஸ் வரை 14,000 கி.மீ.க்கும் அதிகமான வான்வழி தூரத்தைக் கடந்து, வெனிசுலாவிற்கான சவாலான 23 மணி நேரப் பயணத்தை நிறைவு செய்துள்ளன.

கடல்கடந்த இந்த ராணுவ நடவடிக்கை, ஒரு பொறுப்பான முதல்நிலை மீட்பாளராகவும், நம்பகமான மனிதாபிமான கூட்டாளியாகவும் திகழ்ந்து வரும் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த கடினமான நேரத்தில் வெனிசுலா அரசு மற்றும் வெனிசுலா மக்களுடன் இந்தியா தோளோடு தோள் நின்று ஆதரவு வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram