தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 May 2026, 9:32 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அம்பலமாகும் இந்தியாவின் ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடு!

“மேக் இன் இந்தியா”, “ஆத்மநிர்பார்” எனப் பிரதமர் மோடி மேடைதோறும் முழங்கும் முழக்கங்கள் வெறும் ‘டயலாக்’ மட்டுமே என்பதைப் பொருளாதாரத் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு தேசத்தின் சொந்தக் காலில் நிற்கும் வலிமை என்பது அதன் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு’ (R&D) அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில்தான் உள்ளது. ஆனால் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா இதில் மிக மோசமான இடத்தில் உள்ளது: நாடுகள் ஜி.டி.பி.யில் ஆலை உற்பத்தி “ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு” ஒதுக்கீடு தென் கொரியா 27% 5.1% ஜப்பான் 21% 3.6% சீனா 25% 2.6% இந்தியா 13% 0.7% ஜிடிபியில் வெறும் 0.7 சதவீதத்தை மட்டும் ஆராய்ச்சிக்கு ஒதுக்கிவிட்டு வல்லரசு கனவு காண்பது எப்படி? நிஜமான முதலீடு இல்லாமல் வெறும் விளம்பர வெறியால் மட்டுமே அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதிக்க இயலாது ஆட்சியாளர்களே! - அ. அன்வர்

உலகிலேயே வெப்பமான 50 நகரங்களும் இந்தியாவில்தான்!

கடந்த மே 22-ஆம் தேதி உலகிலேயே மிக அதிக வெப்பம் பதிவான 50 நகரங்களின் பட்டியலை எடுத்தால், அத்தனையும் இந்திய நகரங்கள் என்பதுதான் நெஞ்சைப் பதறவைக்கும் உண்மை. இதில் உத்தரப் பிரதேசத்தில் 26 நகரங்களும், ஒடிசாவின் போலாங்கீர் நகரம் உச்சக்கட்ட வெப்பத்தையும் பதிவு செய்துள்ளன. தமிழ கத்திலும் வேலூர் (108.5°F), திருத்தணி (107.8°F), மீனம் பாக்கம் (106.8°F) என வெயில் சதம் அடித்துள்ளது. பருவநிலை மாற்றத்தையும் சுற்றுச்சூழல் சீரழிவையும் கண்டுகொள்ளா மல் கார்ப்பரேட்டுகளுக்குக் காடுகளைத் தாரைவார்க்கும் ஆட்சியாளர்களின் கொள்கை களால், இந்தியா இன்று ஒரு திறந்தவெளி அடுப்பாக மாறிக் கொண்டிருக்கிறது.

கேரளாவிலும் ‘வந்தே மாதரம்’ நாடகம்! சங் பரிவாரத்தின் பின்னணி என்ன?

அங்கீகரிக்கப்படாத முழு வந்தே மாதரம் பாடலை தமிழ்நாட்டில் பாடிச் சர்ச்சை கிளப்பிய அதே ஆளுநர் அர்லேகர்தான் கேரளாவின் ஆளுநராகவும் இருக்கிறார். இதன் விளைவாக, கேரள காங்கிரஸ் அமைச்சரவை பதவி யேற்பு விழாவிலும் இந்த முழுப் பாடல் இசைக்கப்பட்டுப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனை ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு பகுதி என வாலி பர் சங்க தலைவர் சஞ்ஜீவ், முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர். பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ் நிக ழ்ச்சி நிரலுக்கு கேரள காங்கிரஸ் அரசு வெண்சாமரம் வீசுகிற தோ என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு: தென்னகத்திற்குத் தண்டனை வழங்கும் வடமாநிலப் பிறப்பு விகிதம்!

இந்தியாவின் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ள நிலையிலும், வட மாநிலங் களில் அது இன்னும் உச்சத்தி லேயே நீடிக்கிறது. கேரளா, தமிழ்நாடு, தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கல்வியறிவாலும் விழிப்புணர் வாலும் பிறப்பு விகிதத்தை 1.3 ஆகக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், வடக்கே நிலைமை தலைகீழ்: பீகார்: 2.9; உத்தரப்பிரதேசம்: 2.6; மத்தியப் பிரதேசம்: 2.4 பெண் கல்வியிலும் சமூக வளர்ச்சியிலும் பின்தங்கி யுள்ள வட மாநிலங்களின் இந்த மக்கள் தொகை பெருக்கம், ‘தொகுதி மறுவரையறை’ என்ற பெயரில் தென்னகத்தின் அர சியல் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் ஆயுதமாக மாறப் போகிறது. விழிப்புணர்வுடன் நாட்டைப் பாதுகாத்த மாநிலங்க ளுக்குத் தண்டனையும், அலட்சி யமாக இருந்த மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளு மன்றத் தொகு திகளுமா? இது என்னவொரு விசித்திர ஜனநாயகம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.