அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு குறைவு ரூ.694 கோடி செலவிடப்படாமல் முடக்கம் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்
21 Aug 2026, 9:35 pm

அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு குறைவு ரூ.694 கோடி செலவிடப்படாமல் முடக்கம் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.41% மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) செலவிடப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டு களில் அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.694.72 கோடி செலவிடப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

குறையும் பொது முதலீடு

இதுதொடர்பான சிவதாசனின் கேள்விக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலின்படி, ஜிடிபி-யில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான மொத்த செலவினம் (GERD) 2019-20 இல் 0.44% ஆக இருந்தது, 2023-24 இல் 0.41% ஆகக் குறைந்துள்ளது. இது அறிவியல் ஆராய்ச்சியில் பொது முதலீடு தொடர்ந்து சரிந்து வருவதைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, காப்புரிமை (Patents) பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நவீன இந்தியாவின் அறிவியல் எதிர்காலம் கேள்விக்குறி

முன்னணி நாடுகள் புதிய கண்டுபிடிப்பு களுக்காக நிதியை வாரி வழங்கும் நிலையில், இந்தியாவில் ஒதுக்கப்பட்ட நிதிகள்கூட முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் திரும்பப் பெறப்படுவது கண்டனத்திற்குரியது.

எனவே, அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்தவும், ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தவும் ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.