இந்தியாவில் கப்பல்களுக்கான சந்தை வேகமாக வளர்கிறது பொதுத்துறை நிறுவனங்கள்400 கப்பல்களை வாங்கத் திட்டம் சியோலில் ஹூண்டாய் தலைவருடன் சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் பேச்சு
29 Oct 2026, 11:53 pm

இந்தியாவில் கப்பல்களுக்கான சந்தை வேகமாக வளர்கிறது பொதுத்துறை நிறுவனங்கள்400 கப்பல்களை வாங்கத் திட்டம்

சியோலில் ஹூண்டாய் தலைவருடன் சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் பேச்சு

சியோல், அக்.29-இந்தியாவில் கப்பல்களுக்கானசந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.பொதுத்துறை அமைப்புகள் 400க்கும் மேற்பட்ட கப்பல்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன என்று தென்கொரியாவின்சியோல் நகரத்தில் ஹூண்டாய் நிறுவனத் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில் ஒன்றிய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தசோனோவால் கூறினார். தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய துறைமுகங்கள், கப்பல்- நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தென் கொரியாவின்எச்டி ஹூண்டாய் நிறுவனத் தலைவர் சுங் கி-சுனுடன் தென் கொரியா நாட்டின் சியோல் நகரத்தில் ஆலோசனைநடத்தினார். இந்தியா-தென் கொரியா இடையிலான கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் தொழில் துறைகூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் மேற்கொண்டுள்ள நான்கு நாள் தென் கொரியா பயணத்தின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் அக்டோபர் 29 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்ப தாவது: இந்தச் சந்திப்பின் மூலம் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. எச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டுமான பிரிவான HD KoreaShipbuilding & Offshore Engineering இத்திட்டத்தில் முக்கிய முதலீட்டாளராகப் பங்கேற்கும் தனது விருப்பத்தைமீண்டும் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்தைக்கொண்டுள்ளனர். இனிவரும் காலங்களில், திட்டத்தின் வளர்ச்சியைக் கண்காணிக்க கூட்டு பணிக்குழு செயல்படும். கூட்டு நிறுவனம்அமைப்பது இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவார்கள். மேலும், ஆறு மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை முடிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.இந்தச் சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பேசுகையில் , “இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்துவதற்கான தெளிவான நோக்கத்துடன் நாம்செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தைஉருவாக்குவதற்கான அடித்தளமாக, 2026 ஏப்ரல் 20 அன்று கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவது ஒரு முக்கியமைல்கல்லாகும். இந்தத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். திட்டத்திற்கான இடத்தை ஆய்வு செய்வதில் உங்கள்குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். மேலும், ஒன்றிய மற்றும்தமிழ்நாடு மாநில அரசுகளின்குழுக்களுடன் தொடர்ந்து இணை ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது கப்பல்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த சிலஆண்டுகளில், நமது பொதுத்துறை அமைப்புகள் 400-க்கும் மேற்பட்ட கப்பல்களை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளன. ஏற்றுமதிஆணைகளுடன் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள புதிய கப்பல் கட்டும்தளம் அடையாளம் காணப் பட்டுள்ள பலவகையான கப்பல்களை கட்டுவதிலும் முக்கியப்பங்கு வகிக்கும் எனநம்புகிறேன்.தென் கொரியாவின் உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்பத் திறனையும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் சந்தைவாய்ப்புகளையும் ஒன்றிணைப்ப தன் மூலம், உலகளாவிய கடல்சார்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டாண்மையை நாம் உருவாக்கி வருகிறோம். இந்தக் கப்பல் கட்டும் தளத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் திட்டத்தைத் தொடர்ந்து

முன்னெடுத்துச் செல்ல, நேஷனல்ஷிப் பில்டிங் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பார்க், தமிழ்நாடு லிமிடெட் மற்றும் எச்டி கொரியா ஷிப்பில்டிங் -ஆப்சோர் இன்ஜினியரிங் நிறுவனம் (HD Korea Shipbuilding & Offshore Engineering Co., Ltd. (HD KSOE) ஆகியவை தங்களது ஒருமித்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.

இந்திய அரசின் கப்பல் கட்டுதல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம், ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் மொத்தப் பதிவு டன் அளவிலான கப்பல்களைக் கட்டும்

திறன் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திறன் விரிவான திட்ட அறிக்கை மூலம்உறுதிப்படுத்தப்படும். செயல்பாட்டுக்கு வந்ததும், இது இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கப்பல் கட்டும் தளமாக உருவாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் கப்பல் கட்டுமான திறன் கணிசமாக அதி கரிப்பதுடன், உலகளாவிய கடல்சார் தொழில் துறையில் இந்தியாவின்போட்டித்திறனும் வலுப்பெறும்.