தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியது மோடி அரசு! அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து

15 May 2026, 10:13 pm
பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியது மோடி அரசு! அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து
<p><strong>பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியது மோடி அரசு! அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து</strong></p><p>சென்னை, மே 15 - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை, ஒன்றிய பாஜக அரசு, லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 107.45 டாலர்களுக்கு வர்த்தக மாவதைக் காரணம் காட்டி, இந்த விலை உயர்வை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், சென்னையில் பெட் ரோல் விலை 2 ரூபாய் 83 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர்- 103 ரூபாய் 67 காசுகளுக்கும், டீசல் விலை 2 ரூபாய் 86 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 95 ரூபாய் 25 காசு களுக்கும் விற்பனை செய்யப்படு கிறது. இதேபோல தில்லி, கொல் கத்தா, மும்பை பெருநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 3 ரூபாய் 29 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் 3 ரூபாய் 11 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், மேலும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலையை தீர்மானிப்பது எண்ணெய் நிறு வனங்கள் தான் என்று கூறிக்கொ ண்டாலும், நடைமுறையில் மோடி அரசின் கைகளிலேயே அது உள்ளது. 2022 ஜூனில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருந்தது. 2023 ஜூனில் 73 டாலர் என்கிற அளவுக்கு- சுமார் 40 சதவிகிதம் விலை குறைந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் மீது வரிகளைப் போட்டு, விலைகள் குறையாமல் மோடி அரசு பார்த்துக் கொண்டது. ரஷ்ய கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, 73 டாலர் என்ற விலைக்கும் குறைவாக- பீப்பாய்க்கு 10 முதல் 12 டாலர் வரை குறைவாக சுமார் 60 டாலர் விலைக்கு கிடைத்தது. அப்போதும் அதன் பலனை மோடி அரசு மக்களுக்கு கொடுக்கவில்லை. பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களின் சரிபாதி பங்குகளை, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் முதலாளிகள் வைத்துள்ள நிலையில், அவர்களின் கொள்ளை லாபம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதிலேயே மோடி அரசு கண்ணும் கருத்துமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.