முந்தய பக்கம்

பாஸ்போர்ட் தரவரிசை இந்தியாவுக்கு 125ஆவது இடம்

7 Jul 2026, 9:47 pm
பாஸ்போர்ட் தரவரிசை இந்தியாவுக்கு  125ஆவது இடம்

பாஸ்போர்ட் தரவரிசை இந்தியாவுக்கு 125ஆவது இடம்

இங்கிலாந்து நாட்டை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ‘குளோபல் சிட்டிசன் சொல்யூ ஷன்ஸ்’ (Global Citizen Solutions) அமைப்பு வெளி யிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான உல களாவிய பாஸ் போர்ட் தரவரிசைப் பட்டியலை வெளி யிட்டுள்ளது. உலகில் உள்ள 146 நாடு களின் பாஸ்போர்ட்வலிமையை 14 முக்கிய காரணிகளைக் கொண்டு இந்த அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. குறிப்பாக, பயணம் செய்வதற்கான எளிமை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக் கப்படுகிறது.

இந்த தரவரிசைப் பட்டியலில் ஐரோப்பா நாடான சுவீடன் மீண்டும் முத லிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள் ளது. சுவீடன் நாடு 96.05 புள்ளிகளுடன் முத லிடத்தைப் பிடித்து உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக உருவெ டுத்துள்ளது. வழக்கம் போல் ஆப்கா னிஸ்தான் 23.10 புள்ளிகளுடன் பட்டிய லின் கடைசி இடத்தைப் (197ஆவது இடம்) பிடித்துள்ளது.

சுவீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து & டென்மார்க் (இரு நாடுகளும் 5ஆவது இடத்தை பகிர்ந்துள்ளன), அயர்லாந்து, இங்கி லாந்து, நார்வே, சிங்கப்பூர் ஆகிய நாடு கள் முதல் 10 இடத்தை பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்து 125ஆவது இடத்தைப் பிடித் துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இந் தியா 124ஆவது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 127 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, சமீ பத்திய ஆண்டுகளில் தனது உலகளா விய பாஸ்போர்ட் வலிமையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதையும் பெற வில்லை என்பதை இந்தத் தரவரிசை காட்டுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram