இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்களுக்கு அமைதியை மீட்டெடுக்க திறந்த மடல்
1 Jul 2026, 8:53 pm

இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்களுக்கு அமைதியை மீட்டெடுக்க திறந்த மடல்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமைதி, இயல்பு நிலை, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மீட்டெடுக்க வேண்டும் என இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் 100-க்கும் மேற்பட்டோர் திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

‘அமைதி மற்றும் முன்னேற்றத் திற்கான மையம்’ (Centre for Peace and Progress) என்ற அமைப்பினால் ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டுள்ள இக்கடி தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என 117 பிரமுகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர் பகை, இருதரப்பிலும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் பாது காப்பான எதிர்காலத்தைப் பறிக்கிறது. உலக மக்கள் தொகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினரைக் கொண்டுள்ளன.

பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதல் போக்கு, நமது கூட்டுத் திறனைத் தடுத்து, குறிப்பிடத்தக்க சமூக, பொரு ளாதார மற்றும் மனித இழப்புகளை ஏற் படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடுக ளைக் களைவதற்கும், நிலையான மற்றும் வளமான நாட்டை உருவாக்குவ தற்கும் தொடர்ச்சியான ஈடுபாடும் பேச்சு வார்த்தையும் மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்று நாங்கள் நம்புகி றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், வர்த்தகம் மற்றும் பய ணத்திற்காக அட்டாரி-வாகா எல்லையை முழுமையாக மீண்டும் திறக்கவும், ஸ்ரீநகர்-முசாஃபராபாத் பேருந்து சேவை உள்ளிட்ட பிற இணைப்புத் திட்டங்களை மீண்டும் தொடங்கவும், வணிக ரீதியி லான விமான நிறுவனங்களுக்கு வான் வெளியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீரின் தலைமை மௌ லவி மிர்வாய்ஸ் உமர் பரூக், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெக பூபா முஃப்தி, ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா உள்ளிட்ட 61 பேர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து, முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி, வெளியுறவுத்துறை அதி காரி அஷ்ரப் ஜெஹாங்கீர், அணுசக்தி இயற்பியலாளரும் எழுத்தாளருமான பர்வேஸ் ஹூத்பாய் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.