தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

2 Feb 2026, 3:32 pm
விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தால் ரூ.2,748 கோடி வரை இழப்பு

10ஆவது சீசன் ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்  இந்தியா - இலங்கை நாடுகளில் கூட் டாக நடைபெறுகிறது. பிப்., 7 அன்று தொடங்கும் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஞாயிறன்று அறி வித்தது. இது பாதுகாப்புக் காரணங் களைக் கூறி, உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசத் திற்கு ஆதரவான நிலைப்பாடு என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் நிதி நெருக் கடியை ஏற்படுத்தும் என கிரிக்கெட் சார்ந்த பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதுதொடர்பாக அவர்கள் கூறுகை யில், ”கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி  சர்வதேச அரங்கில் அதிக வருமானம் ஈட்டித் தரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தப் போட்டியின் போது 10 விநாடி விளம்பர இடைவெளிக்கு சுமார் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூ லிக்கப்படுகிறது. அதனால் போட்டி நடைபெறாவிட்டால், ஒளிபரப்பு நிறு வனமான பிரதமர் மோடியின் நெருங்கிய நபரான அம்பானியின் ஜியோ ஸ்டாருக்கு மட்டும் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி  வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. அதே போல டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப் மற்றும் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகள் மூலம் சர்வ தேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ஐசிசி) ஏற்படக்கூடிய நேரடி மற்றும் மறைமுக இழப்பு சுமார் ரூ.2,748 கோடி வரை என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர்கள் எச்சரித்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி கொழும் பில் (இலங்கை) நடைபெறவிருந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங் கேற்காத பட்சத்தில், இந்தியாவுக்கு ‘வாக்-ஓவர்’ அடிப்படையில் 2 வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ள பின்விளைவுகள்

இந்தியாவிற்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) பாகிஸ்தான் மீது கடுமை யான நிதி மற்றும் இதர தடைகளை விதிக்க வாய்ப்புள்ளது. ஐசிசி தனது வருடாந்திர வருவாயில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய பங்கினை நிறுத்தி கூட வைக்கலாம். அதே போல ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே ஈடுசெய்ய  வேண்டும் என்று ஐசிசி உத்தரவிடவும் வாய்ப்புள்ளது. அதே போல  பாகிஸ்தான் சூப்பர் லீக் (ஐபிஎல் போன்று அந்நாட்டு உள்ளூர் டி-20 தொடர்) தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட லாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்படலாம். ஐசிசி  தலைவராக அமித் ஷா மகன் ஜெய் ஷா இருப்பதால், பாகிஸ்தான் மீதான நடவடிக்கை எதிர்பார்ப்புகளை விட தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா போன்று பாகிஸ்தான் அணியை சஸ்பெண்ட் செய்ய திட்டம்?

டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகக் கடுமையான தடைகளை  விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இதுகுறித்து உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1970ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்டது போன்ற தடைகளை பாகிஸ்தானுக்கு விதிக்க ஐசிசி ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டி களிலிருந்தும் பாகிஸ்தான் விலக்கி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா 1970-களில் தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி கொள்கை காரணமாக, அந்நாட்டுடன் விளையாடப் பல நாடுகள் மறுத்தன. இதன்விளைவாக, 1970 முதல் 1991 வரை சுமார் 21 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்காவிற்கு ஐசிசி தடை விதித்தது. மேலும் அந்த நாடு கிரிக்கெட் உலகிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இப்போது பாகிஸ்தான் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஐசிசி அதே போன்றதொரு “முழுமையான இடைநீக்கத்தை”   பாகிஸ்தான் மீதும் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.