தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜதந்திரத் தோல்வியும் எகிறும் எண்ணெய் விலையும்

7 Jun 2026, 9:45 pm
ராஜதந்திரத் தோல்வியும் எகிறும் எண்ணெய் விலையும்

ராஜதந்திரத் தோல்வியும் எகிறும் எண்ணெய் விலையும்

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறனற்ற, தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கை களால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஒரு கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய எஜமானர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சி, சர்வதேசச் சந்தையில் ஆரம்பத்தில் கிடைத்த மலிவு விலை ரஷ்யக் கச்சா எண்ணெயை முறையாக பயன்படுத்தத் தவறிய மோடி அரசு, தற்போது வேறு வழியின்றி மாட்டிக்கொண்டு விழிக்கிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு சாமானிய மக்களுக்குப் பாடம் எடுக்கும் பிரதமர், தனது அரசின் பெருந்தவறு களால் ஏற்பட்டுள்ள இமாலயப் பண இழப்பை மக்கள் மீதே விலைவாசி உயர்வாகச் சுமத்திப் பலி கொடுக்கிறார்.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்ச கத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் 2026-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதிச் செலவு மார்ச் மாதத்தின் 15.4 பில்லியன் டாலரிலிருந்து 61.3 சதவீதம் எகிறிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஆரம்பத்தில் ரஷ்யா வழங்கி வந்த தள்ளுபடிகள் (Discount) அனைத்தும் தற்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டன. மாறாக, மார்ச் மாதத்தில் ஒரு டன்னுக்கு 14.8 டாலராக இருந்த கூடுதல் கட்டணம் (Premium), ஏப்ரல் மாதத்தில் 425 சதவீதம் எகிறி 77.8 டாலராக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய எண்ணெய்க்காக இந்தியா ஒரு டன்னுக்கு 864.9 டாலர் வீதம் மொத்தம் 5.8 பில்லியன் டாலரை வாரி இறைத்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்கு மதிச் செலவில் 37.7 சதவீதமாகும். தொகையின் அடிப்படையில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 34.3 சதவீதமாக உயர்ந்திருப்பதும், இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி அளவும் மார்ச் மாதத்தின் 158.5 லட்சம் டன்னிலிருந்து ஏப்ரலில் 195.3 லட்சம் டன்னாக 23 சதவீதம் அதிகரித் துள்ளது.

அதேசமயம் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு 3.8 சதவீதமாக, அதாவது கடந்த 8 மாதங் களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தா லும், கடந்த காலங்களில் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்து உள்நாட்டு நலன்களைப் பலியிட்டதன் விளைவை நாடு இப்போது அனுபவிக்கிறது. ஒருபுறம் கார்ப்பரேட் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்கி உலக நாடுகளுக்கு விற்றுத் தங்களின் லாபக் கணக்கைப் பெருக்கிக் கொள்ள மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. மறுபுறம், அந்த நிறுவனங்களின் லாப வேட்டைக்காக இந்தியக் குடிமக்களின் கொஞ்ச நஞ்சக் கையிருப்பும் சூறையாடப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.