ஸ்கேன் இந்தியா
1 hour before

ஸ்கேன் இந்தியா

சோகக்கதை

“ஒவ்வொரு நாளும் பேரழிவுதான்” என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு அறிக்கை. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான தட்பவெப்பநிலை காரணமாக இந்தியாவில் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 220 பேர் பலியாகியுள்ளனர்; 1 லட்சத்து 28 ஆயிரத்து 334 வீடுகள் அழிக்கப்பட்டன; சுமார் 42 லட்சம் ஹெக்டேர் நிலம் சேதமடைந்தன. முதல் ஒன்பது மாதங்களில் 92% நாட்களில் கடுமையான தட்பவெப்பநிலையே நிலவியதுதான் இந்த மோசமான பாதிப்புகளுக்குக் காரணம் என்று அறிக்கை சொல்கிறது. இந்தக் கடுமையான தட்பவெப்பநிலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது என்றும் ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மர்மக்கதை

பஞ்சாபில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. போட்டி என்பது ஆளும் ஆம் ஆத்மிக்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையில் என்று சொல்லப்படுகிறது. இதனால் சிரோமணி அகா லிதளத்தோடு மீண்டும் இணைந்து தேசிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் போட்டியிட பாஜக முயல்கிறது. அதோடு, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பஞ்சத்தைப் போக்கவும், பிற கட்சிகளில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறது. ஒரேநாளில் ஒரேநபர் இரண்டு கட்சிகளுக்குத் தாவுவதும் நடக்கிறது. யார் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக மாறியிருக்கிறது. உட்கட்சிச் சண்டையும் தொடங்கியுள்ளதாம். ஆம் ஆத்மியில் இருந்தும், காங்கிரசில் இருந்தும் வந்தவர்கள் சண்டை போடுகிறார்களாம். எப்படியோ கட்சி இருப்பது தெரிகிறது என்று பாஜக தலைமை அமைதி காக்கிறது.

தொடர்கதை

வியாழனன்று காலையில் புதுதில்லியின் கரோல்பாக் பகுதியில் உள்ள கபார் கடைவீதியில் தீப்பற்றியது. தீயை அணைப்பதற்குள் சேதம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. தலைநகர்ப் பகுதியில் தொடர்ந்து தீ விபத்துகள் நடந்து வருகின்றன. 2019 முதல் மார்ச் 2026 வரையிலான கணக்கே கண்கட்ட வைக்கிறது. 543 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரத்து 403 பேர் காயமடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக மங்கோல்புரி பகுதியில் நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். தொடர்கதையாக மாறியுள்ள தீ விபத்துகளுக்கு அரசை நோக்கிதான் வல்லுநர்கள் விரல் நீட்டுகிறார்கள். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஒட்டுமொத்த நிர்வாகமும் இருந்து வருகிறது. பெயரளவுக்குள்ள அதிகாரங்கள்தான் மாநில அரசுக்கு உள்ளது. “நிர்வாகக் சீர்கேடுகள்தான் காரணம். அதைச் சரிசெய்யாமல் தீ விபத்துகளைக் குறைப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

விடுகதை

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த தேர்தலில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி, இந்தமுறை இப்போதிருந்தே தயாராகிவிட்டது. “பேச்சுவார்த்தைக்குத் தயார். அதே வேளையில், 403 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களும் தயாராக உள்ளனர்” என்று சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த முறை, வேறு வழியின்றி வெறும் 21 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு கூட்டாளியான சுஹேல்சிங் பாபர், “பீகார் கட்சியை உத்தரப்பிரதேசத்திற்கு அனுமதிக்க மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார். “பெயரில் தேசியம். ஆனால் பேசுவதெல்லாம் மாநிலப் பிரிவினை. யார் என்று கண்டுபிடியுங்கள்” என்று விடுகதை போட்டு ஆளும் கூட்டணியை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.