தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

31 Oct 2026, 9:00 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

மீண்டும் குலுங்கும்

ஆகஸ்ட் மாதத்தில் சூரத் நகரமே குலுங்கிப்போகும் அளவுக்கு மில்தொழிலாளர்கள் போராட்டம் நடந்தது. சில சமூக விரோத சக்திகளால் அதுவன்முறையாக மாறியது. நிலைமையைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர். ஆனால் நீண்ட காலமாக உள்ள வேலை நேரம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், வார விடுமுறைஉள்ளிட்ட பல கோரிக்கைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. இதனால் நவம்பர் 1 அன்று கண்டனப் போராட்ட ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. தீபாவளி நெருங்கும் வேளையில் கடும்பாதிப்பு உருவாகலாம் என்ற நிலையில், கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தம் நடக்கும்என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆகஸ்டில் நடந்த வன்முறைக்கு அப்பாவித் தொழிலாளர்கள் பழிவாங்குவதும் கூடாதுஎன்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் தவறு

திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வழக்கமான விதிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதெல்லாம் பெரும்பாலும் விவாதத்திற்குஉள்ளாவதில்லை. ஆனால், அரசு எந்திரத்தைப் பெரும் அளவில் தவறாகப் பயன்படுத்தும் வேலையை பாஜகசெய்வதால், இந்த விதிமுறைகள் பேசுபொருளாகி உள்ளன. அமைச்சர்கள் அரசு வாகனங்களையே இதற்கும்பயன்படுத்துகிறார்கள். இதனால் சட்டவிரோதப் பண விநியோகத்திற்கு இது எளிதாக உள்ளது. பல இடங்களில் மக்களைத் திரட்டுவதற்கும் இந்த அரசு எந்திரம் பயன்படுகிறது. இப்படிப்பட்ட வேலைகள் இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் நடைபெறவில்லை. கிராமக்குழுத் தேர்தல்களைப் போல மனுக்களை தராமல் இருப்பதில் தொடங்கி முடிவுகளில் தில்லுமுல்லு செய்வது வரையில் பாஜகவின் கரங்கள் நீளுவதால்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

மீண்டும் பணி

உத்தரப்பிரதேசத்தில் கஸ்தூரிபாய் காந்தி குழந்தைகள் பள்ளிகளில் குறுகிய கால ஒப்பந்தப்பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கடும் நெருக்கடியில்உள்ளனர். 12ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னாலும், பிடித்தங்கள் போக 9ஆயிரம்தான் வருகிறது. பிடித்தங்களால் தங்களுக்குப் பலன் இருக்குமா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த மாணவிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதே இந்தஆசிரியர்களின் பணியாகும். ஓராண்டுக்கு ஒப்பந்தப்பணி என்ற அடிப்படையில் பணிபுரியும் இவர்களில்சிலர் 15 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால் நிரந்தரப்பணி கிடைக்கவில்லை. நீதிமன்ற வழக்கு தற்போது போடப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களின் சம்பளத்தை 17 ஆயிரமாக உயர்த்தியுள்ள நீதிமன்றம், இந்தப்பணியிடங்களைநிரந்தரமாக்கும் வழியைப் பாருங்கள் என்று கூறியிருக்கிறது.

மீண்டும் அசைவம்

குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று

மாநில அரசு ஆணையிட்டது. அசைவ விற்பனை, சேமிப்பு, விநியோகம் மற்றும் தயாரித்தல் என்று எந்த வடிவத்திலும் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்று அந்த ஆணை கூறியது. இதற்கு எதிராக அப்பகுதியில் உள்ள ஆறு உணவகங்களின் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அசைவ உணவுக்கான தடையை ரத்து செய்தனர். மேல் முறையீடு செய்யும் வரையில் ஆணை நடைமுறையில் இருக்க வேண்டும் என்கிற அரசின் கோரிக்கையையும் நிராகரித்தனர். இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என்று வாய்மொழி உத்தரவாக நீதிபதிகள் கூறிவிட்டனர். இந்தத் தீர்ப்பினால் அசைவஉணவு விற்பனை உடனடியாக உணவகங்களில் இருக்கும் என்று உரிமையாளர்கள் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.