தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியா - நியூசிலாந்து தாராள வர்த்தக உடன்பாடு உலக வர்த்தகக் கட்டமைப்பிற்கு இந்தியாவை அடிமையாக்கும் முயற்சி - பி.கிருஷ்ண பிரசாத்

2 Jun 2026, 8:41 pm
இந்தியா - நியூசிலாந்து தாராள வர்த்தக உடன்பாடு  உலக வர்த்தகக் கட்டமைப்பிற்கு  இந்தியாவை அடிமையாக்கும் முயற்சி - பி.கிருஷ்ண பிரசாத்

இந்தியா - நியூசிலாந்து தாராள வர்த்தக உடன்பாடு உலக வர்த்தகக் கட்டமைப்பிற்கு இந்தியாவை அடிமையாக்கும் முயற்சி - பி.கிருஷ்ண பிரசாத்

உள்நாட்டு விவசாயத்தை நவீனப் படுத்தாமலும், சிறுதுண்டு உற்பத்தி யில் இருந்து பெரிய அளவிலான கூட்டு உற்பத்திக்கு மாறாமலும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) இந்தியாவிற்குப் பயன ளிக்குமா? இந்தியாவின் வர்த்தகக் கொள்கையின் மையமான அம்சமாக இருக்கும் இந்த பில்லியன் டாலர் கேள்விக்கான பதில்: உள்நாட்டு விவசாயச் சீர் திருத்தங்கள் இல்லாத தாராள வர்த்தக ஒப்பந்தம் என்பது, நமது விவசாய மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் (MSME) துறைகளை வெளிநாட்டுச் சந்தை சக்திகளுக்குக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். சிறிய, துண்டுதுக்காணி நிலங்களைக் கொண்ட இந்திய விவசாயிகள், நியூசிலாந்து போன்ற அதிநவீன, பெரிய அளவிலான உற்பத்தி முறையைக் கொண்ட நாட்டுடன் போட்டியிட எல்லையைத் திறக்கும்போது, அதன் பாதிப்பு பேரழிவாகவே இருக்கும்.

பொருளாதார அளவிலான பெரும் வேறுபாடுகள்

நியூசிலாந்தில் ஒரு தனி நபர் சராசரியாக 160 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தையும், 400-க்கும் மேற்பட்ட மாடுகளையும் தானியங்கி கறவை இயந்தி ரங்கள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் கொண்ட புல்வெளி மேலாண்மை மூலம் பராமரிக் கிறார். மாறாக, சராசரி இந்திய விவசாயி 1.08 ஹெக்டேர் நிலத்தையும், 2 முதல் 3 மாடுகளையும் மட்டுமே கைமுறையாகப் பராமரிக்கிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுச் சாகுபடி மூலம் பெரிய அள விலான உற்பத்திக்கு மாறாமல், இந்திய விவசாயிக ளால் உலகச் சந்தையின் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விலையுடன் போட்டியிட முடியாது.

வர்த்தக வரம்புகள் இருந்தபோதிலும், நியூசி லாந்தின் உற்பத்திச் செலவு இந்தியாவை விடக் குறைவு. அந்நாட்டில் 2022-இல் மொத்தப் பண்ணை களின் எண்ணிக்கையே 47,000-க்குக் கீழ் இருந்தது. இந்த ஒருங்கிணைப்பு பண்ணைகளின் அளவை நிலப்பரப்பில் பெரிதாக்கியுள்ளது. நியூசிலாந்தின் மொத்த உழைக்கும் வர்க்கத்தில் விவசாயம் சார்ந்தி ருப்பவர்கள் வெறும் 5.6% முதல் 6.6% மட்டுமே; ஆனால் இந்தியாவில் இது 48% ஆக உள்ளது. நியூசிலாந்தில் விவசாயம் என்பது ஒரு தொழில்; இந்தியாவில் அது வாழ்வாதாரம்.

வர்த்தக வரம்புகள் இருந்தபோதிலும், நியூசி லாந்தின் உற்பத்திச் செலவு இந்தியாவை விடக் குறைவு. அந்நாட்டில் 2022-இல் மொத்தப் பண்ணை களின் எண்ணிக்கையே 47,000-க்குக் கீழ் இருந்தது. இந்த ஒருங்கிணைப்பு பண்ணைகளின் அளவை நிலப்பரப்பில் பெரிதாக்கியுள்ளது. நியூசிலாந்தின் மொத்த உழைக்கும் வர்க்கத்தில் விவசாயம் சார்ந்தி ருப்பவர்கள் வெறும் 5.6% முதல் 6.6% மட்டுமே; ஆனால் இந்தியாவில் இது 48% ஆக உள்ளது. நியூசிலாந்தில் விவசாயம் என்பது ஒரு தொழில்; இந்தியாவில் அது வாழ்வாதாரம்.

மிக மோசமாகப் பாதிக்கப்படும் ஆப்பிள் விவசாயிகள்

2026 ஏப்ரல் 27 அன்று கையெழுத்தான இந்தியா - நியூசிலாந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்து தனது முதன்மை வகைப் பழங்கள், இறைச்சி மற்றும் ஒயின் போன்ற பொருட்களுக்கு இந்தியாவின் பெரும் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரண மாக இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநில ஆப்பிள் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர். நியூசிலாந்து ஆப்பிள்க ளுக்கான இறக்குமதி வரி 50%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இறக்குமதி விலை ஒரு கிலோ விற்கு 1.25 டாலர் (தற்போதைய மதிப்பில் ரூ. 119) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25% வரியுடன் சேர்த்து, நியூசிலாந்து ஆப்பிள் இந்திய மொத்த விற்பனைச் சந்தையில் நிகர விலையாக ரூ. 148.75-க்குக் கிடைக்கும். மேலும், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் கிவி பழங்க ளுக்கான வரி 33%-லிருந்து 0% ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. மனுகா தேனுக்கான (Manuka Honey) வரி 66%-லிருந்து 16.5% ஆக 5 ஆண்டுகளில் குறைக்கப்படவுள்ளது.

நியூசிலாந்தின் ஆப்பிள் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 50 முதல் 70 மெட்ரிக் டன்கள் ஆகும்; இது இந்தியாவின் உற்பத்தித்திறனை (ஒரு ஹெக்டேரு க்கு 7 முதல் 9 மெட்ரிக் டன்கள்) விட 6 முதல் 8 மடங்கு அதிகம். நியூசிலாந்தில் சராசரி பண்ணை அளவு 50 ஹெக்டேருக்கும் அதிகம். அங்குள்ள 1,200 முதல் 1,500 பண்ணைகள் ஆண்டுக்கு 5,65,000 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்து உலக அளவில் 15-ஆவது இடத்தில் உள்ளன; இதில் முழுவதுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிநவீன நடவு, குளிர்பதனக் கிடங்கு மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை காரணமாக அவர்களின் உற்பத்திச் செலவு மிகக் குறைவு. இந்தி யாவில் சராசரி பண்ணை அளவு 1 முதல் 2 ஏக்கர் மட்டுமே. உற்பத்தி 25 லட்சம் மெட்ரிக் டன்களுடன் உலக அளவில் 5-ஆவது இடத்தில் இருந்தாலும், 97-98% பழங்கள் உள்நாட்டுச் சந்தையிலேயே விற்கப் படுகின்றன.

வரிக்குறைப்புடன் நியூசிலாந்து ஆப்பிள்கள் உள்ளே நுழைவது இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சிறு உற்பத்தியாளர்களான இந்திய விவசாயிகள், இடைத்தரகர்களாலும் பெரு வணிகர்களாலும் சுரண்டப்பட்டு அற்ப விலைக்குப் பொருட்களை விற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநில விவசாயிகளை இந்தச் சுரண்ட லில் இருந்து பாதுகாக்க மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மாறாக, சர்வதேசக் கார்ப்பரேட்டு களின் லாபத்தை மேலும் அதிகரிக்கவும், சுரண்ட லைத் தீவிரப்படுத்தவும் இந்தியாவின் பெரும் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டுள்ளது

கார்ப்பரேட்டுகளுக்கு வேட்டைக்காடு; விவசாயிகளுக்குப் பேரழிவு

இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் (ரூ. 1,90,800 கோடி) முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள் ளது. இதில் கணிசமான பகுதி விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலை வெளிநாட்டுக் கார்ப்ப ரேட்டுகள் ஆக்கிரமிக்க அனுமதிக்கும் இத்தகைய நேரடி அந்நிய முதலீடு (FDI) நாட்டின் இறையாண்மை க்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தானது.

நவீன குளிர்பதனக் கட்டமைப்பு, உயர்தர நடவுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லை மாநிலங்களான ஜம்மு -காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டின் ஆப்பிள் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முனையும். இந்திய அரசியலமைப்பின்படி விவசாயம் என்பது மாநிலப் பட்டியலின்கீழ் வரும் விவகாரம் என்பதால், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் இம்முடிவு குறித்து நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் இதனை தீவிரமாகக் கவ னத்தில் கொண்டு, இந்த ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க மோடி அரசை வற்புறுத்த வேண்டும்.

8 கோடி இந்தியப் பால் உற்பத்தியாளர்களின் அகில இந்திய எதிர்ப்புக்கு அஞ்சியே இத்துறையை மட்டும் இவ்வொப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலக்கி யுள்ளனர். எனினும், அனைத்துப் பிரிவு விவசாயிகளும் ஒருங்கிணைந்து இந்த தாராள வர்த்தக உடன்பாட்டை எதிர்க்க வேண்டும். இந்த ஒப்பந்தம், இதற்கு முந்தைய இந்தியா-அமெரிக்கா மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்களைப் போலவே, தேச விரோத மோடி அரசின் கார்ப்பரேட் விசுவாசத்தை அம்பலப்படுத்துகிறது.

இந்திய கார்ப்பரேட்டுகள் உலக வர்த்தகக் கட்ட மைப்போடு தங்களை இணைத்துக் கொண்டு, உலக ளாவிய வர்த்தகத்தின் மூலம் பெரும் லாபத்தைக் குவிக்க விரும்புகின்றனர். இந்தியாவில் கார்ப்பரேட் வர்க்கத்தின் முதன்மை அரசியல் பிரதிநிதியாக விளங்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி, தங்கள் வர்க்க நலன்களுக்கு அடிபணிந்து விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு உற்பத்தித் துறையினர் என ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதா ரத்தையும் ஆபத்தில் தள்ளுகிறது. இந்தியாவின் தேசிய நலன்களை விட, தற்போதைய அமைப்பு ரீதியான நெருக்கடியில் இருந்து தப்பிக்கத் தவிக்கும் உலக முதலாளித்துவ அமைப்பையும், வளர்ந்த முதலா ளித்துவ நாடுகளையும் பாதுகாப்பதே இந்த தாராள வர்த்தக ஒப்பந்தங்களின் உண்மையான நோக்கமாகும்.

எனவே, இந்திய நலன்களுக்குப் பெரும் அழிவை விளைவிக்கும் இத்தகைய தாராள வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து, விவசாயிகளையும் தொழி லாளர்களையும் திரட்டி அவர்களுக்கு இடையே ஒரு வலுவான, வெல்ல முடியாத கூட்டணியை உரு வாக்குவதே தற்போதைய வரலாற்றுத் தேவையாகும். அகில இந்திய விவசாயிகள் சங்கமும் (AIKS), இந்திய ஆப்பிள் விவசாயிகள் கூட்டமைப்பும் (AFFI) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெ டுத்து, இந்தியா-நியூசிலாந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்யச் செய்யும் வரை ஓயாது. தமிழில் சுருக்கம் : ராகினி​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.