நேபாள மறுகட்டமைப்புக்கு இந்தியா ரூ. 15,000 கோடி!
19 minutes before

நேபாள மறுகட்டமைப்புக்கு இந்தியா ரூ. 15,000 கோடி!

புதுதில்லி, நவ. 23 - நேபாளத்திற்கு சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான உதவித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.22) இந்தியா வந்துள்ளார். நேபாளப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். திங்கட்கிழமை (நவ.23) பிரதமர் மோடியுடன் அவர் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே வெள்ள நிவாரண நிதி, ரயில் மற்றும் சாலை இணைப்புத் திட்டங்கள், விண்வெளி, கல்வி

மற்றும் எரிசக்தித் துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமீபத்திய வெள்ளத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். நேபாளத்தின் மறுகட்டமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்காக சுமார் ரூ.15,000 கோடி (24,000 கோடி நேபாள ரூபாய்) மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் தொகுப்பையும் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா - நேபாள உறவு என்பது வெறும் அண்டை நாடுகளுக்கானது மட்டுமல்ல; அது பிரிக்க முடியாத நம்பிக்கை மற்றும் நட்பின் அடையாளம்” என்றார்.