2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு 1.5 லட்சம் நிறுவனச் செயலாளர்கள் தேவை இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத் தலைவர் தகவல்
17 May 2026, 11:53 pm

2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு 1.5 லட்சம் நிறுவனச் செயலாளர்கள் தேவை இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத் தலைவர் தகவல்

சென்னை,மே17- இந்தியாவில் வரும் 2047ஆம் ஆண்டிற்குள் 1.5 லட்சத்திற்கும் அதிக மான நிறுவனச் செயலாளர்கள் தேவைப் படுவார்கள் என்று இந்திய நிறுவனச் செய லாளர்கள் நிறுவனத்தின் தலைவர் பவன் ஜி. சந்தக் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாநாட்டின் இடையே பேசிய அவர், தற்போதைய நிலவரப்படி உடனடியாக பத்தாயிரம் நிறுவனச் செயலாளர்கள் தேவை ப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தமிழகம் மற்றும் சென்னை நிலவரம் குறித்துப் பகிர்ந்த அவர், தமிழ்நாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் மாணவர்கள் இந்த படிப்பிற்குப் பதிவு செய்துள்ளதாகவும், இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மொத்தம் நாலாயிரம் உறுப்பினர்கள் படித்து முடித்துச் சேவையாற்றி வருவதாகவும், அதில் சென்னையில் மட்டும் 2ஆயிரத்தி 671 பேர் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிக வலுவாக உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்தம் எண்பதாயிரம் நிறுவனச் செய லாளர்களில், கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்துப் பேசிய சந்தக், தேசியக் கல்விக் கொள்கையை நூறு சதவீதம் முழுமை கப் பின்பற்றிய முதல் நிறுவனம் தங்களுடை யதுதான் என்றார். தங்களின் பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுக ப்படுத்தியதும் தாங்கள்தான் என்றும், தொழில் துறையின் மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் தொடர்ந்து புதுப்பிக் கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், கார்ப்பரேட் சட்டங்கள் மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை மேலாண்மை போன்ற புதிய படிப்புகளையும் அறிமுகப் படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இது குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றார். இன்றைய இளம் தலைமுறை மாணவர்களை இந்தத் துறை யின் பக்கம் ஈர்க்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.