இந்தியா - மியான்மர் எல்லையில் பண்டமாற்று முறையில் போதைப்பொருள் கடத்தல்
28 Oct 2026, 8:57 pm

இந்தியா - மியான்மர் எல்லையில் பண்டமாற்று முறையில் போதைப்பொருள் கடத்தல்

புதுதில்லிஇந்தியா மற்றும் மியான்மர் எல்லைப்பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தில், ‘பண்டமாற்று முறை’ பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. பாஜக ஆட்சியில் எல்லையோர மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன.

எல்லையில் பணத்தை நேரடியாக கடத்தாமல் அதற்குப் பதிலாக, போதைப்பொருளுக்கான பணத்தைக் கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப்பட்டு மியான்மருக்கு அனுப்பப்படுவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்குப் பதிலாக பொருட்கள்மணிப்பூரின் எல்லைப் பகுதியான சுராசந்த்பூர் மாவட்டத்திலுள்ள ஏடிஎம் மற்றும்பணப் பரிமாற்ற மையம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை ஆய்வு செய்தது.

மேற்கு வங்கம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து மைதா, சமையல் எண்ணெய், கோதுமை மாவு போன்ற அன்றாட உணவுப்பொருட்களை வாங்குவதற்காக ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகைப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டது.இந்தப் பொருட்கள் ‘கோ ஆல்பா ட்ரிப்’என்ற பணப் பரிமாற்ற மையத்தின் பெயரில் விலைப்பட்டியல்கள் பெறப்பட்டு, மிசோரம் தலைநகர் ஐசாவல்மற்றும் எல்லை நகரங்க

ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; பின்னர்அங்கிருந்து அவை மியான்மருக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம்கிடைக்கும் வருமானம், மியான்மரில் உள்ள போதைப்பொருள் விற்பனை கும்பல்களுக்கு கொடுக்கப்பட்டுதீர்த்துவைக்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள சிலபெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பு நிலையங்களும் இந்தச் சட்டவிரோதச் செயலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத ஓட்டுநர்களுக்கு மொத்தமாக எரிபொருள் விற்றதாகக் கூறி, மிசோரமில் உள்ள இரண்டு எரிபொருள் நிலையங்கள் முறையே ரூ. 2.21 கோடி மற்றும் ரூ. 40.25 லட்சத்தைப் பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளன.

இதுமட்டுமின்றி, பிஸ்கட்டுகள், நூடுல்ஸ், பால் மற்றும் குளிர்பானங்கள் போன்ற மளிகைப் பொருட்களை மியான்மருக்கு மொத்தமாக விற்றதற்காக ஒரு மளிகைக் கடை ரூ. 13.96 கோடியைப் பெற்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள ‘மியூல்’ (Mule) வங்கிக் கணக்குகள் வழியாக மியான்மருக்குக்கடத்தப்பட்ட பதைப்பொருள் விற்பனை மூலம் சுமார் ரூ. 175கோடி கைமாறியுள்ளது. இதுதவிர்த்துதனிப்பட்ட முறையில் இந்த பண்டமாற்று முறைவர்த்தகமும் அரங்கேறியுள்ளது.