முந்தய பக்கம்

இந்தியாவில் செல்போன்கள் விற்பனை கடுமையான சரிவு

13 Jun 2026, 9:08 pm
இந்தியாவில் செல்போன்கள் விற்பனை கடுமையான சரிவு

இந்தியாவில் செல்போன்கள் விற்பனை கடுமையான சரிவு

இந்திய செல்போன்கள் சந்தை யில் நடப்பு நிதியாண்டின் தொ டக்கத்திலேயே நுகர்வோரின் ஆர்வம் கணிசமாகக் குறைந்துள்ளதை வெளிப்படுத்தும் வி தமாக, கடந்த மே மாதத்தில் செல் போன்களின் ஒட்டு மொத்த விற்பனை 35 சதவீதமாக மிக மோசமான அளவில் சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் அல்லாத பிற மாதங்களிலும் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை பொதுவாக சீராக இருக்கும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையிலும், கடந்த ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடு கையிலும் இந்த 35 சதவீத வீழ்ச்சி என்பது மிக அதிகம் என சந்தை ஆய்வு நிறுவ னங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக சந்தை ஆய்வு வல்லுநர்கள் கூறுகையில்,”சர்வதேசச் சந்தையில் உதிரிபாகங்களின் விலை உயர்வால், பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் புதிய போன்கள் வாங்குவதைத் தள்ளிப் போட்டுள்ளனர். பண நெருக்கடி நீண்டு வருவதால் மக்கள் தங்களின் பழைய போன்களையே 3 ஆண்டுகள் வரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இந்த திடீர் சரிவு ஆன்லைன் தளங்க ளை விட, ஆப்லைன் எனப்படும் சில்லரை விற்பனைக் கடைகளை கடுமையாகப் பாதித்துள்ளது. கடைகளில் தேங்கிக் கிடக்கும் பழைய மொபைல் போன்களின் கையிருப்பைக் குறைப்பதற்காக, வரும் வாரங்களில் முன்னணி நிறுவ னங்கள் அதிரடித் தள்ளுபடிகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என அவர்கள் கூறியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram