தீக்கதிர் விரைவு செய்திகள்
28 May 2026, 9:42 pm

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 51% அதிகரிக்கும்

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தி யாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 51% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என நைட் பிராங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மேலும் கூறுகையில்,“2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 30 மில்லி யன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.250 கோடி) அதிகமான சொத்துக்க ளைக் கொண்ட பெரிய செல்வந்தர்களின் எண்ணிக்கை 63 சதவீதம், அதாவது 12,000-லிருந்து கிட்டத்தட்ட 20,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2031ஆம் ஆண்டுக்குள் 27 சதவீதமாக அதிகரிக்கும் (25,000-ஐத் தாண்டும்). ஸ்டார்ட்-அப்கள், பட்டியலிடப்பட்ட பங்குகள், தனியார் மூலதனம், குடும்பத் தொழில்கள் உள்ளிட்ட பல துறைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ குறைபாடு பொறுப்பேற்பதாக ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர் வெழுதிய மாணவர்களின் விடைத் தாள் டிஜிட்டல் முறையில் திருத்தப் பட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது மற்றும் விடைத்தாள் மாறியது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”டிஜிட்டல் முறை மதிப்பீட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சம்பவத் துக்கு நான் பொறுப்பேற்கிறேன். இது சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.