தங்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்து
3 Oct 2026, 10:01 pm

தங்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹாக்கி பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஆடவர் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தக்கவைத்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். மேலும், இதன் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடித் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கெனவே மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய மகளிர்அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவைவீழ்த்தித் தங்கம் வென்றிருந்தது. இதன் மூலம், ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டுமே தங்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.