தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா 40% சரிவு மேற்கு ஆசியப் போர் பதற்றமே காரணம்

29 Mar 2026, 3:34 pm
இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா 40% சரிவு மேற்கு ஆசியப் போர் பதற்றமே காரணம்
<p><strong>இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா 40% சரிவு மேற்கு ஆசியப் போர் பதற்றமே காரணம்</strong></p> <p>புதுதில்லி மேற்கு ஆசியாவில் நிலவும் &nbsp;போர் பதற்றம் காரண மாக, இந்தியாவின் மருத் &nbsp;துவச் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. வெளி நாட்டு நோயாளிகளின் வருகை 30% முதல் 40% வரை குறைந்துள்ள தாகத் தொழில்முறை அறிக்கை கள் மூலம் செய்திகள் வெளியா கியுள்ளன. இது தொடர்பான தொழில்முறை அறிக்கைகளில், தில்லி என்சிஆர் மற்றும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற &nbsp;மாநிலங்களில் உள்ள முக்கிய மருத்துவ மையங்களில் மருத்து வச் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் &nbsp;வருவாய் கணிசமாகக் குறைந்துள் ளது. அதாவது மாதாந்திர வரு வாயில் 15% முதல் 20% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு ஆசிய நாடு களிலிருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 75% வரை வீழ்ச்சி யடைந்துள்ளது. இதயம், புற்று நோய், எலும்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைக்காக 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக வரும் நோயா ளிகள், விமான ரத்து மற்றும் விசா தாமதங்களால் வர முடியாமல் தவிக்கின்றனர். விமானப் போக்கு வரத்து சில பகுதிகளில் தொடங்கினா லும், கட்டணங்கள் 15% முதல் 25% வரை உயர்ந்துள்ளது நோயாளி களுக்குப் பெரும் சுமையாக மாறி யுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் இருந்த &nbsp;நிலையை விட, மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் மத்திய கிழக்கு &nbsp;நாடுகளிலிருந்து வரும் நோயாளி களின் வருகை கடுமையாக வீழ்த் &nbsp;துள்ளதாகத் துறை சார்ந்த வல்லு நர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.