உற்பத்தி இலக்குகள் கொள்கை வடிவம் பெறுமா?
yesterday

உற்பத்தி இலக்குகள் கொள்கை வடிவம் பெறுமா?

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, வாகனத் துறை, மூலதனப் பொருட்கள், இரசாயனங்கள், பாதுகாப்பு, மின்னணுவியல், உணவுப் பதப்படுத்தல், தோல்பொருட்கள், மருந்துகள், சூரிய சக்தி, எஃகு, தொலைத்தொடர்பு மற்றும் ஜவுளி உள்ளிட்ட 12 முக்கியத் துறைகளைக் கண்டறிந்துள்ளது. பல்வேறு கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியப் பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்கு நீண்டகாலமாக 17 சதவீதத்திலேயே தேங்கிநிற்கிறது. விவசாயத் துறையின் பங்கான 18 சதவீதத்தை விடவும் இது குறைவாக உள்ள சூழலில்,சீனா தனது உற்பத்தியின் பங்கை 3.9 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாக உயர்த்திய வரலாற்றுச் சாதனையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் திறன்இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

தனியார்மயமாக்கல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற பல்வேறு திட்டங்கள் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டாலும் உற்பத்தியின் பங்கு பெரிய அளவில் உயரவில்லை. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்குவதை விட, துறைசார் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுடன் ஒருங்கிணைவது என்ற கருத்து சரி; ஆனால் மோடிஅரசு செய்யுமா?

மேலும், இந்தத் திட்டம் பல பலவீனங்களைக் கொண்டுள்ளது. இந்த 12 தொழில்துறைகள் ஒட்டு

மொத்த இந்திய உற்பத்தியில் பாதியை உள்ளடக்கியுள்ளன; இத்தனை துறைகளையும் ஒரே நேரத்தில் மாற்றமடையச் செய்வது ஒரு தீவிரமானமற்றும் கவனம் செலுத்திய தொழில் கொள்கையாக இருக்க முடியாது. இதற்கு அரசாங்கத்தின் நிர்வாகத் திறனைத் தாண்டிய நிதியும் செயலாக்கஆற்றலும் தேவைப்படும். மிக முக்கியமாக, இந்த அறிக்கையில் நிதிச் செலவு குறித்த மதிப்பீடோ அல்லதுவெவ்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுபற்றியோ எந்தவிதமான தெளிவும் இல்லை.

தனிப்பட்ட நிறுவனங்களின் குறைகளைத் தாண்டி, உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஒருங்கிணைப்புக்குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். இரசாயனத் துறையில் பொது உள்கட்டமைப்பையும், ஜவுளித்துறையில் திறன் மேம்பாட்டையும், தொலைத்தொடர்பில்உள்ளூர்மயமாக்கலையும் முன்னிறுத்துவது இக்கொள்கையின் சிறப்பம்சங்களாகும். மீண்டும்அதே கேள்வி தான், மோடி அரசு செய்யுமா?

நிர்வாகக் குழுக்களோ அல்லது இலக்குகள் தவறும்போது ஆதரவைத் திரும்பப் பெறும் வழிமுறைகளோ இல்லாமல் இத்தகைய வெறும் விருப்ப அறிக்கைகளை தயாரிப்பது உண்மையான வியூகமாகாது. துறைசார்ந்த திறன்களை வளர்ப்பதற்கானஇந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், நிதிச்செலவுகள், முன்னுரிமைகள் மற்றும் செயலாக்கப்பங்குகள் தெளிவாக வரையறுக்கப்படாவிட்டால், உலகளாவிய உற்பத்திச் சாம்பியன்களை உருவாக்குவது வெறும் எட்டாக்கனியாகவே எஞ்சும்.