4 லட்சம் பேரல் கேஸ் தட்டுப்பாடு: கெப்ளர் நிறுவனம் தகவல்
20 May 2026, 9:10 pm

4 லட்சம் பேரல் கேஸ் தட்டுப்பாடு: கெப்ளர் நிறுவனம் தகவல்

புதுதில்லி இந்தியாவில் கேஸ் இறக்குமதி சரிந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை, உள் நாட்டு உற்பத்தியால் ஈடுசெய்ய முடிய வில்லை.

இதனால் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேரல் திரவமாக்கப் பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘கெப்ளர்’ (Kpler) என்ற பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் நாளொன்றுக்கு சரா சரியாக 8,51,870 பேரல்கள் இறக்கு மதியாயின.

அதுவே ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 3,77,620 பேரல்கள் எல்பிஜி மட்டுமே வந்தன.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதுஅமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொ டுத்ததை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் நாளொ ன்றுக்கு 1,73,000 பேரல்களாகக் குறைந் துள்ளது.

இது பிப்ரவரி மாத அளவை விட 75 சதவிகிதம் சரிவாகும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததாகக் கூறப்பட்டாலும் நாளொன்றுக்கு வெறும் 75,000 பேரல் கள் மட்டுமே உயர்ந்துள்ளது.

இது அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதல்ல.

ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளி லிருந்து எரிவாயுவை இந்தியா வாங்கி யுள்ளது.

ஆனால், கடந்த மாதத்தில் இந்த நான்கு நாடுகளிலிருந்தும் நாளொ ன்றுக்கு 43,000 பேரல் எல்பிஜி மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற வரு டாந்திர வணிக உச்சிமாநாட்டில் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, “எந்தவொரு நெருக்கடியும் இல்லை” , கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளுடன் சேர்த்து, இந்தியா விடம் “45 நாட்களுக்குத்” தேவையான எல்பிஜி இருப்பு உள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு ஒவ்வொன்றும் 69 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் தான் கெப்ளர் தரவுகள் இந்தியாவின் பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து வெறும் 5-6 நாட்களில் எரிபொருட்கள் இந்தியா வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 20 நாட்களும், சிலி மற்றும் அமெரிக்கா விலிருந்து எரிபொருட்கள் வர 35 முதல் 45 நாட்கள் வரையும் கால தாமதம் ஆகிறது.