தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தான் குறைவாம் மோடி அரசு மழுப்பல்

7 Jun 2026, 9:40 pm
சமையல் எரிவாயு விலை  இந்தியாவில் தான் குறைவாம் மோடி அரசு மழுப்பல்

சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தான் குறைவாம் மோடி அரசு மழுப்பல்

மேற்கு ஆசிய போரைக் காரண பொருளாக கூறி, நாட்டில் பெட் ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை மோடி அரசு தாறுமாறாக உயர்த்தி வருகிறது.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள் ளது. இந்த புதிய விலையேற்றம் ஞாயி றன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஞாயிறன்று முதல் ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.46 உயர்ந்துள்ளது.

சென்னை யில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ.3,283 என தற்போது விற் பனை ஆகி வருகிறது. இந்த விலை யேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் மழுப்பல் இந்நிலையில், இந்த விலையேற்றம் தொடர்பாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் மழுப்பலாக விளக்கம் தந்துள்ளது.

அதில்,”மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

அதன் விளைவாக வீட்டு உபயோக சமை யல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை விநி யோகிப்பதற்கான செலவு ரூ.1,600-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது இறக்கு மதி விலை உடன் தொடர்பு கொண்டது. விலை உயர்ந்துள்ள சூழலிலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடு களை காட்டிலும், பொருளாதார ரீதியாக முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடு களை காட்டிலும் இந்தியாவில்தான் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை குறைவாக உள்ளது” என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.